ADDED : நவ 03, 2022 10:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒரு முகூர்த்தம் என்பது 48 நிமிடங்களை கொண்ட கால அளவு.
* சூரிய உதயத்திற்கு முன்னுள்ள 48 நிமிடங்களை அருணோதயம் என்பர்.
* தீபாவளியன்று அதிகாலை 5:00 - 5:30 மணிக்குள் நீராடுங்கள்.
* சூரிய உதயத்திற்கு பின் தான் எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆனால் அனைவரும் தீபாவளியன்று மட்டும் விதிவிலக்காக அருணோதயத்தில் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்றும், தன் மகனான நரகனை நினைவு கூற வேண்டும் என பகவான் கிருஷ்ணரிடம் வரம் பெற்றாள் பூமாதேவி.
* எண்ணெய்யில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும் என்கிற கூடுதல் வரத்தையும் பெற்றாள்.
* அதனால் தான் தீபாவளியன்று ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டு நலம் விசாரிக்கும் போது கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்கும் வழக்கம் உருவானது.

