sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பைரவர் போற்றி

/

பைரவர் போற்றி

பைரவர் போற்றி

பைரவர் போற்றி


ADDED : மே 19, 2011 12:46 PM

Google News

ADDED : மே 19, 2011 12:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்குரிய இந்த போற்றியைப் பாடுவதன் மூலம் தைரியம் அதிகரிக்கும், பீடைகள் விலகும். பயணங்களின் போது பாதுகாப்பு கிடைக்கும். சுவர்ணகர்ஷண பைரவரை மனதில் எண்ணி பாடினால் செல்வம் அதிகரிக்கும்.

1. ஓம் பைரவரே போற்றி

2. ஓம் பயநாசகரே போற்றி

3. ஓம் அஷ்டரூபனே போற்றி

4. ஓம் அஷ்டமி தோன்றலே போற்றி

5. ஓம் அயன்குருவே போற்றி

6. ஓம் அறக்காவலரே போற்றி

7. ஓம் அகந்தை அழிப்பவரே போற்றி

8. ஓம் அடங்காரின் அழிவே போற்றி

9. ஓம் அற்புதரே போற்றி

10. ஓம் அசிதாங்க பைரவரே போற்றி

11. ஓம் ஆனந்த பைவரே போற்றி

12. ஓம் ஆலயக் காவலரே போற்றி

13. ஓம் இன்னல் தீர்ப்பவரே போற்றி

14. ஓம் இடுகாட்டில் இருப்பவரே போற்றி

15. ஓம் உக்ர பைரவரே போற்றி

16. ஓம் உடுக்கை ஏந்தியவரே போற்றி

17. ஓம் உதிரம் குடித்தவரே போற்றி

18. ஓம் உன்மத்த பைரவரே போற்றி

19. ஓம் உறங்கையில் காப்பவரே போற்றி

20. ஓம் ஊழத்தருள்வோரே போற்றி

21. ஓம் எல்லைத்தேவனே போற்றி

22. ஓம் எளிதில் இரங்குபவரே போற்றி

23. ஓம் கபாலதாரியே போற்றி

24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி

25. ஓம் கர்வபங்கனே போற்றி

26. ஓம் கல்பாந்த பைரவரே போற்றி

27. ஓம் கதாயுதனே போற்றி

28. ஓம் கனல் வீசும்கண்ணனே போற்றி

29. ஓம் கருமேகநிறனே போற்றி

30. ஓம் கட்வாங்கதாரியே போற்றி

31. ஓம் களவைக் குலைப்போரே போற்றி

32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி

33. ஓம் கால பைரவரே போற்றி

34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி

35. ஓம் கார்த்திகையில் பிறந்தவரே போற்றி

36. ஓம் காளாஷ்டமிநாதரே போற்றி

37. ஓம் காசிநாதரே போற்றி

38. ஓம் காவல்தெய்வமே போற்றி

39. ஓம் கிரோத பைரவரே போற்றி

40. ஓம் கொன்றைப்பிரியரே போற்றி

41. ஓம் சண்டபைரவரே போற்றி

42. ஓம் சட்டைநாதரே போற்றி

43. ஓம் சம்ஹார பைரவரே போற்றி

44. ஓம் சங்கடம் தீர்ப்பவரே போற்றி

45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

46. ஓம் சிவாலயத்து இருப்பவரே போற்றி

47. ஓம் சிக்ஷகனே போற்றி

48. ஓம் சீர்காழி தேவரே போற்றி

49. ஓம் சுடர் சடையனே போற்றி

50. ஓம் சுதந்திர பைரவரே போற்றி

51. ஓம் சிவ அம்சனே போற்றி

52. ஓம் சுந்தர பைரவரே போற்றி

53. ஓம் சூலதாரியே போற்றி

54. ஓம் சூழ்வினை அறுப்பவரே போற்றி

55. ஓம் செம்மேனியரே போற்றி

56. ஓம் ÷க்ஷத்ரபாலரே போற்றி

57. ஓம் தனிச்சந்நிதியுளாரே போற்றி

58. ஓம் தலங்களின் காவலரே போற்றி

59. ஓம் தீதழிப்பவரே போற்றி

60. ஓம் துர்ஸ்வப்ன நாசகரே போற்றி

61. ஓம் தெற்கு நோக்கரே போற்றி

62. ஓம் தைரியமளிப்பவரே போற்றி

63. ஓம் நவரச ரூபனே போற்றி

64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி

65. ஓம் நள்ளிரவு நாயகரே போற்றி

66. ஓம் நரகம் நீக்குபவரே போற்றி

67. ஓம் நாய் வாகனரே போற்றி

68. ஓம் நாடியருள்வோரே போற்றி

69. ஓம் நிமலனே போற்றி

70. ஓம் நிர்வாணரே போற்றி

71. ஓம் நிறைவளிப்பவரே போற்றி

72. ஓம் நின்றருள்வோரே போற்றி

73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி

74. ஓம் பகையளிப்பவரே போற்றி

75. ஓம் பரசு ஏந்தியவரே போற்றி

76. ஓம் பலிபீடத்து உறைவோரே போற்றி

77. ஓம் பாபம் களைபவரே போற்றி

78. ஓம் பால பைரவரே போற்றி

79. ஓம் பாம்பணியனே போற்றி

80. ஓம் பிரளயகாலரே போற்றி

81. ஓம் பிரம்மசிர சேதரே போற்றி

82. ஓம் பூஷண பைரவரே போற்றி

83. ஓம் பூதப்ரேத நாதரே போற்றி

84. ஓம் பெரியவரே போற்றி

85. ஓம் பைராகியர் நாதரே போற்றி

86. ஓம் மலநாசகரே போற்றி

87. ஓம் மஹா பைரவரே போற்றி

88. ஓம் மணி அணிந்தவரே போற்றி

89. ஓம் மகர குண்டலரே போற்றி

90. ஓம் மகோதரரே போற்றி

91. ஓம் மார்த்தாண்ட பைரவரே போற்றி

92. ஓம் முக்கண்ணனே போற்றி

93. ஓம் முக்தியருள்வோரே போற்றி

94. ஓம் முனீஸ்வரரே போற்றி

95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

96. ஓம் யமவாதனை நீக்குபவரே போற்றி

97. ஓம் யாவர்க்கும் எளியவரே போற்றி

98. ஓம் ருத்ரரே போற்றி

99. ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி

100. ஓம் வடுக பைரவரே போற்றி

101. ஓம் வடுகூர்நாதரே போற்றி

102. ஓம் வடகிழக்கு அருள்வோரே போற்றி

103. ஓம் வடைமாலை பிரியரே போற்றி

104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி

105. ஓம் வாமனர்க்கு அருளியவரே போற்றி

106. ஓம் விபீஷண பைரவரே போற்றி

107. ஓம் வீழாமல் காப்பவரே போற்றி

108. ஓம் விரும்பியதை அருள்பவரே போற்றி போற்றி






      Dinamalar
      Follow us