ADDED : மார் 20, 2020 10:20 AM

என்ன தேவை
அரிசி - 100 கிராம்
இனிப்பு மாங்காய்த் துருவல் - 6 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 4 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 8
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/௪ ஸ்பூன்
பெருங்காயம் - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எப்படி செய்வது: சாதம் குழையாமல் பக்குவமாக வேக வைத்து களிம்பு ஏறாத பாத்திரத்தில் வைக்கவும். மாங்காய், தேங்காய், மிளகாய் வற்றல் மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கடுகைச் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். முந்திரிபருப்பை சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், மஞ்சள், பெருங்காயத்தை வறுத்து வைக்கவும். கடலைப் பருப்பை பொன்னிறமாகவும், கடுகை தாளித்தும் எடுக்கவும். பெருங்காயம், வெந்தயம், மஞ்சளுடன் உப்பையும் சேர்த்து பொடி செய்யவும். அரைத்த மாங்காய், முந்திரிபருப்பு, கடலைப்பருப்பு, தாளித்த கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம், உப்பு, எண்ணெய்யை சாதத்துடன் கிளறினால் சுவையான மாங்காய் சாதம் ரெடியாகி விடும்.