ADDED : மார் 20, 2020 10:18 AM

* பூசணிக்காயை பெண்கள் உடைக்காமல், ஆண்கள் மட்டுமே உடைக்க வேண்டும்.
* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்காமல் வழியனுப்பக் கூடாது.
* வருடம் ஒரு முறை மட்டுமே சுமங்கலிப் பிரார்த்தனை செய்யலாம்.
* மாலைநேர வெயிலும், ஹோமப் புகையும் உடலில் பட ஆயுள் நீடிக்கும்.
* சிவன் - நந்தி, தந்தை - மகன், ஆசிரியர் - மாணவன், கணவன் - மனைவி, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை, மாடு - கன்று இவர்களின் குறுக்கே செல்லக் கூடாது.
* சனிக்கிழமை தவிர மற்ற நாளில் அரசமரத்தை கைகளால் தொடக் கூடாது.
* கிழிந்த துணி, செருப்பை பயன்படுத்தக் கூடாது.
* எழுத்துக்கள் சரஸ்வதியின் வடிவம் என்பதால் அச்சிடப்பட்ட காகிதம், துணிகளின் மீது உட்காரக் கூடாது.
* ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
* வீட்டில் பறவைகள் கூடு கட்டியிருந்தால் அதை களைக்கக் கூடாது.