தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/புரட்டாசி சனி பிட்ஸ்

புரட்டாசி சனி பிட்ஸ்

புரட்டாசி சனி பிட்ஸ்


ADDED : செப் 29, 2015 10:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2015 10:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புரட்டாசி சனியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு செல்வீர்கள் அல்லவா! அங்கு செல்லும் முன் இதோ... கிருஷ்ணர் பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* கிருஷ்ண வழிபாடு தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்துவருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப்பழமை வாய்ந்த ஆதாரம் ரிக் வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இந்திரனுக்கு அவ்வப்போது தலைக்கனம் வருவதுண்டு என்று புராணங்களில் கூறி இருப்பதால் கிருஷ்ணன் இந்திரனை அடக்க போரிட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து.

* சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மைந்தன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* மருத்துவ தொழிலை துவங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்டே பணி தொடங்கவேண்டும் என அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.

* அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னால் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

* யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததை மெகஸ்தனிஸ் உறுதிப் படுத்துகிறார்.

* சிலப்பதிகாரத்தில் கிருஷ்ணனின் மனைவி நப்பின்னை என்றும், அண்ணன் பலராமன் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மை ஆனவள் என தமிழ் இலக்கியம் கூறுகிறது.

* ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்துவிட்டதால் பூமி இருளடைந்து தவித்த வேளையில், கிருஷ்ணர், சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us