ADDED : அக் 10, 2021 12:06 PM

துர்வாரம் த்வாதசாரம் த்ரிஷத பரிமிலத் ஷஷ்டி பர்வாபி வீதம்
சம்ப்ராம்யத் க்ரூரவேகம் க்ஷணமனு ஜெகதாச்சித்ய ஸந்த்தாவமானம்I
சக்ரம்தே காலரூபம் வ்யதயது ந துமாம் த்வத்பதை காவலம்பம்
விஷ்ணோ காருண்ய ஸிந்த்தோ பவனபுரபதே பாஹி ஸர்வாம யௌகாத் II
கங்கைநீர் பாய்ந்த பாத பங்கயத்து எம்அண்ணலே
அங்கையாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தென் உலாவு மென்மலர்
மங்கை மன்னி வாழுமார்ப ஆழி மேனி மாயனே
என்ற ஆழ்வார் பாசுரத்தின்படி இந்த ஸ்லோகத்தில் சக்கரத்தாழ்வார் பெருமையை பட்டத்ரி கூறுகிறார். 12 ஆரக்கால்கள், 360 முனைகளும் கொண்டது காலச்சக்கரம். இவை 12 மாதம், 360 நாட்களைக் குறிக்கும். எம்பெருமான் ஒருவரைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாத அச்சக்கரம் நம்மை வலிய பிடித்து இழுத்துச் செல்கிறது. குருவாயூரப்பனின் திருவடியை பற்றினால் கால சக்கரத்தின் பிடியில் இருப்பது தப்பலாம்.
- எல்.ராதிகா, திருச்சி
radhu_g16@yahoo.co.in
