ADDED : மே 16, 2016 10:38 AM

அ நிறம் | அளவு
1. திருவிளையாடல் புராணத்தை தமிழில் எழுதியவர்........
பரஞ்சோதி முனிவர்
2. திருவிளையாடல் புராணத்தின் மூல நூல்.........
ஹாலாஸ்ய மகாத்மியம்
3. சிவபெருமானுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர்......
பினாகபாணி
4. படைவீடுகளில் யானை வாகன முருகன் எங்கிருக்கிறார்?
சுவாமிமலை
5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வடிவமைத்த சிற்பி......
எக்காட்டூர் கோன் பெருபரணன்
6. தங்க பள்ளியறை அமைந்த பழமையான சிவன் கோவில்.........
காளையார்கோவில் (சிவகங்கை மாவட்டம்)
7. மராட்டிய சிவாஜி வழிபட்ட தமிழக அம்பிகை.......
சென்னை காளிகாம்பாள்
8. வீணை இல்லாமல் சரஸ்வதி இருக்கும் தலம்.......
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில்
9. கிளி வடிவில் அருணகிரிநாதர் பாடிய பாடல்.......
கந்தரனுபூதி
10. பனைமரத்தாலான முருகன் மூலவராக அருளும் தலம்..........
திருப்போரூர்
