ADDED : ஜன 10, 2019 03:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சூரியனார் கோவிலுக்கு ........... என்றும் பெயருண்டு
அர்க்க வனம்
2. அர்க்க வனம் என்பதன் பொருள்.......
எருக்கஞ்செடி நிறைந்த காடு
3. சூரியனார் கோவில் மூலவரின் பெயர்.........
சிவசூரிய நாராயணர்
4. சூரியன் உச்சம் பெற்று ஆற்றலுடன் திகழும் மாதம்........
சித்திரை - மேஷ ராசி
5. நீசம் பெற்ற சூரியன் பலம் இழக்கும் காலம்..........
ஐப்பசி - துலாம் ராசி
6. சூரியனுக்குரிய திதி விரதம்.............
ரத சப்தமி (தை மாத வளர்பிறை சப்தமி)
7. ............ குலத்தில் சூரியன் குலதெய்வமாக வணங்கப்பட்டார்
இக்ஷ்வாகு
8. மனித வாழ்நாளில் சூரியதிசைக்குரிய காலம்..........
6 ஆண்டு
9. சூரியனின் பகை ராசிகள்............
ரிஷபம், மகரம், கும்பம்
10. ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்...........
ஒரு மாதம்

