ADDED : ஜன 20, 2019 08:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. தீப்பிழம்பான முருகனை கங்கை தாங்கியதால்...... என்று பெயர்
காங்கேயன்
2. சிவபார்வதிக்கு நடுவில் முருகன் இருக்கும் கோலம்......
சோமாஸ்கந்த மூர்த்தி
3. முருகனுக்காக சூரபத்மனிடம் துாது சென்றவர்.......
வீரபாகு
4. முருகன் மீது ஸ்கந்தகுரு கவசம் பாடியவர்.......
சாந்தானந்தர்
5. ஞானசம்பந்தரை முருகனின் அவதாரமாக போற்றியவர்.....
அருணகிரிநாதர்
6. 'வேளைக்காரன்' என முருகன் அழைக்கப்படக் காரணம்.........
தக்க சமயத்தில் அருள்புரிபவன்
7. ஜோதிப்பிழம்பான முருகனுக்கு ...... என்ற பெயருண்டு
அக்னிப்பூ
8. படைவீடுகளில் மூன்றாவதாகப் போற்றப்படும் தலம்......
பழநி
9. திருமுருகாற்றுப்படை திருச்செந்துாரை........ எனக் குறிக்கிறது
திருச்சீரலைவாய்
10. திருச்செந்துார் முருகன் மீதுள்ள திருப்புகழ் பாடல்கள்.........
83

