ADDED : நவ 11, 2010 04:52 PM
(1) ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை...
பந்தளராஜா ராஜசேகரன்
(2) மாலை அணிவித்த ஆண்களை ஐயப்பன் என்பர், பெண்களை..........என்போம்
மாளிகைப்புறம்
(3) சபரிமலையில் ஐயப்பன் வீற்றிருக்கும் ஆசனம்...
பத்மாசனம்
(4) பதினெட்டாம் படி எதனால் அமைக்கப்பட்டுள்ளது....
கிருஷ்ண சிலை என்னும் ஒருவகை மரத்தால். அதன் மேல் பஞ்சலோகத் தகடு வேயப்பட்டுள்ளது.
(5) எருமைத்தலை அரக்கி மகிஷியை மணிகண்டன் கொன்ற இடம்...
எருமேலி
(6) ஐயப்பன் மாலையில் எத்தனை துளசிமணிகள் இருக்கலாம்...
54 அல்லது 108
(7) சபரிமலை செல்வோர் அணிய வேண்டிய ஆடையின் நிறம்...
நீலம் அல்லது கருப்பு
(8) சபரிமலை சன்னிதானம் தவிர
வேறு எங்கிருந்தெல்லாம் மகரஜோதியை தரிசிக்கலாம்....
அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு
(9)கன்னி மூல கணபதி கோயில் அமைந்த இடம்....
பம்பைக் கரை
(10) 'சபரிமலை' என்ற பெயரிலுள்ள 'சபரி' என்பது யார்...
ராமபக்தையான ஒரு மூதாட்டியின் பெயர், ராமனுக்கு காய்ந்த இலந்தைப் பழத்தை
பக்தியுடன் கொடுத்தவர்.