sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 22, 2020 06:14 PM

Google News

ADDED : மே 22, 2020 06:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விளக்கை கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பம் விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

* கர்ப்பிணிகள் நல்ல காற்றை சுவாசித்தும், சுத்தமான நீரில் குளித்தும், பக்தி நுால்களைப் படித்தும் வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

* நெளிந்த, பழுதுபட்ட தட்டில் சாப்பிடவோ நெளிந்த, கீறல் விழுந்த டம்ளரில் தண்ணீர் குடிக்கவோ கூடாது.

* ஆண்கள் அநாவசியமாக தலைமுடி, தாடியை வளர்ப்பது கூடாது.

* வலம்புரிச் சங்கு மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. இதை லட்சுமி விக்ரஹத்தின் அருகில் வைத்து வழிபட செல்வம் பெருகும்.

* சிவனுக்கு வில்வம், நாகலிங்கப்பூவால் அர்ச்சனை செய்ய திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதை கடைபிடிப்பவர்கள் மறுபிறவியிலும் இணைந்து வாழ்வர்.

* விநாயகருக்கு தேங்காய் எண்ணெய்யிலும், திருமாலுக்கு நல்லெண்ணெய்யிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு.

* திங்கட்கிழமையும், சிவராத்திரியும் இணைந்து வந்தால் அது யோக சிவராத்திரியாகும். அந்நாளில் சிவதரிசனம் செய்தால் ராஜயோக வாழ்வு அமையும்.

* கேது தோஷம் உள்ளவர்கள் பவுர்ணமியன்று, ''சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம் லேகணீ பத்ர தாரிணம் சித்திர தத்னாம்பர தரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்'' என்ற ஸ்லோகம் சொல்லி சித்திர குப்தரை வழிபட சங்கடம் தீரும்.

* தினமும் உணவில் சீரகம் சேர்த்தால் ரத்த ஓட்டம் சீர்படும். உடல் குளிர்ச்சியாக இருக்கும்.






      Dinamalar
      Follow us