மே 22, வைகாசி 9: அமாவாசை விரதம், முன்னோர் வழிபாடு, கார்த்திகை விரதம், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை, ஏரல் அருணாசல சுவாமி சிறப்பு பூஜை, சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்
மே 23, வைகாசி 10: புன்னாக கவுரி விரதம், குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு அபிேஷகம், திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம், கருட தரிசனம்
மே 24, வைகாசி 11: முகூர்த்த நாள், சந்திர தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்
மே 25, வைகாசி 12: ரம்பா திரிதியை, மாதவி விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருநட்சத்திரம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
மே 26, வைகாசி 13: கதளி கவுரி விரதம், அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல், சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், பத்ராசலம் ராமர் சிறப்பு வழிபாடு, நம்பியாண்டார் நம்பி குருபூஜை
மே 27, வைகாசி 14: முகூர்த்த நாள், நமிநந்தியடிகள், சேக்கிழார் நாயனார் குருபூஜை, நாலுகவிபெருமாள், நல்லான் திருநட்சத்திரம்
மே 28, வைகாசி 15: சஷ்டி விரதம், அக்னி தோஷ நிவர்த்தி, ஆரண்ய கவுரி விரதம், சோமாசி நாயனார் குருபூஜை