sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 20, 2020 10:57 AM

Google News

ADDED : ஜூலை 20, 2020 10:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பார்வதியுடன் சிவன் அருள்புரியும் கைலாயமே 'சிவராஜ்தானி' எனப்படுகிறது. இது இமயமலையில் 22 ஆயிரத்து 28 அடி உயரத்தில் உள்ளது. * சிவபெருமான் இருப்பதால் கைலாயத்தைக் காலால் மிதிப்பது கூடாது என்று இரு கைகளையும் தரையில் ஊன்றி தலை கீழ்ப்புறம் இருக்கும்படி மலையேறினார் காரைக்கால் அம்மையார். * காளத்தி கைலாய கிரிப் பிரதட்சணம் சகல பாவங்களையும் போக்கும். ஆந்திராவில் உள்ள காளத்திமலை தென்னக கைலாயமாகத் திகழ்கிறது. * திருநெல்வேலி மாவட்டம் மானுாரிலுள்ள நடராஜர் சபை 'ஆச்சரிய சபை' எனப்படுகிறது. * ராஜசேகர பாண்டியன் என்னும் பக்தனுக்காக சிவன் மதுரையில் கால் மாறி ஆடினார். * அமாவாசையும், திங்கட்கிழமையும் இணையும் நாளில் அரசமரத்தை வழிபட்டால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும். * நந்தி, விநாயகர், மகா காளன், விருஷபர், பிருங்கி, முருகன், பார்வதி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிவனின் அஷ்ட பரிவாரங்கள் ஆவர். * சிவபெருமானுக்கு கட்டிய கோயிலை ஈச்வர கிருஹம் என்று அழைப்பர்.* சிவபெருமானின் நெற்றிக்கண் ஞானத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. * 'ஓம் சிவாய நம' என்பதிலுள்ள 'சிவ' என்ற மந்திர எழுத்தைக் கண்ணின் கருவிழியாகச் சொல்வார்கள். * சிவபெருமான் திருமுடியை விரித்தபடி அருளும் தலம் திருவையாறு. அதனால் இங்கு கருவறையை வலம் வருவதில்லை. * வேதத்தின் ஒரு பகுதியான ஸ்ரீருத்ரம் சிவபெருமானை போற்றுகிறது. இதுவே வேதத்தின் நடுப்பகுதியாகும். * சிவதுர்கையின் இடது கையில் மானும், வலது கையில் மழு ஆயுதமும் இருக்கும்.






      Dinamalar
      Follow us