ADDED : ஜூலை 16, 2021 04:29 PM

* பெரியவர்கள் முன் கால் மீது கால் வைத்தபடி உட்காரக் கூடாது.
* அமாவாசையை அடுத்த நான்காம் பிறையை (சதுர்த்தி) பார்க்க கூடாது.
* செப்புப் பாத்திரத்தில் பசும்பாலை வைக்கக் கூடாது.
* உணவில் அதிகளவு உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு சேர்க்கக் கூடாது.
* கர்ப்பிணிகள் காளான் சாப்பிடக் கூடாது.
* பெருமூச்சு விடுவது பெரும் தவறு. அவருக்கும், அருகில் உள்ளவர்களுக்கும் தீங்குண்டாகும்.
* இலவசமாக எள்ளை வாங்கக் கூடாது.
* சூரிய அஸ்தமன நேரத்தின் போது சாப்பிடக் கூடாது.
* தானமாக தந்த உணவைப் பழிக்கக் கூடாது.
* வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. அதே சமயம் கோயிலில் ஏற்றலாம்.
* பெருமாள் மீது மட்டுமல்ல... சிவன் மீதும் திருப்பல்லாண்டு உண்டு. இதைப் பாடியவர் சேந்தனார்.
* 'பெருமாளே' என முருகனை அழைத்தவர் அருணகிரிநாதர்.
* பன்னிரு திருமுறைகளில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை 18,350.
* ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரத்தை கட்டியவர் வல்லபதேவ பாண்டியன்.
* விஸ்வாமித்திர ரிஷியால் சொர்க்கம் பெற்ற மன்னர் திரிசங்கு.
* ராமானுஜரால் உபதேசிக்கப்பட்ட தத்துவம் விசிஷ்டாத்வைதம்.
* கும்பகோணத்தை தேவாரப் பாடல்கள் 'குடமூக்கு' எனக் குறிக்கப்பிடுகின்றன.

