தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 10, 2021 09:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2021 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர்.

* கிருஷ்ணர் நள்ளிரவு 12:00 மணிக்கு மதுராவிலுள்ள சிறைச்சாலையில் பிறந்தார்.

* வசுதேவர் - தேவகி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கிருஷ்ணர்.

* கர்க முனிவர் தலைமையில் கிருஷ்ணரின் பெயர் சூட்டு விழா நடந்தது.

* தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடிய ஆழ்வார் பெரியாழ்வார்.

* பாகவதம் என்னும் நுாலில் பத்தாம் காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு இடம் பெற்றுள்ளது.

* பாகவதத்தின் பத்தாம் காண்டத்தை 'சர்க்கரை பந்தலில் தேன்மழை' என போற்றுவர். * கமானிக்யா என்னும் ஜோதிட நுாலில் கிருஷ்ணரின் ஜாதகம் இடம் பெற்றுள்ளது.

* கிருஷ்ணர் தன் ஏழாவது வயதில் அசுரனான கம்சனை வதம் செய்தார்.

* பாம்பு வடிவில் கிருஷ்ணரைக் கொல்ல வந்தவன் அகாசுரன்.

* ஆயர் சிறுவனாக தோன்றி கிருஷ்ணரைக் கொல்ல வந்தவன் பிரலம்பாசுரன்.

* ஆயர்பாடியில் கிருஷ்ணரின் பால்ய நண்பர்கள் ஸ்ரீதாமா, ஸுபலா, ஸ்தோக கிருஷ்ணா

* மருதமரமாக இருந்து கிருஷ்ணரால் சுயவடிவம் பெற்றவர்கள் நளகூபன், மணிக்ரீவன்

* கிருஷ்ண தரிசனம் பெற பூலோகம் வந்த பசு சுரபி

* பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் கிருஷ்ணர் ஆடியது ராஸ நடனம்

* ராஸ நடனம் என்பதற்கு பல பெண்களுடன் நடனமாடுவது என பொருள்.

* ஆயனுக்காக (கண்ணனுக்காக) கனவு கண்ட பெண் ஆழ்வார் ஆண்டாள்.

* கிருஷ்ணர் மீது ஜயதேவர் பாடிய ஸ்தோத்திரம் கீதகோவிந்தம்.

* குருவாயூரப்பன் மீது நாராயணீயம் பாடியவர் நாராயண பட்டத்திரி

* ஆதிசங்கரர் பாடிய கிருஷ்ணர் பாடல்கள் பஜகோவிந்தம், நந்த நந்தன அஷ்டகம்

* மதுரா சிறையில் பிறந்த கிருஷ்ணரே அந்நாட்டின் மன்னராக ஆட்சி புரிந்தார்.

* கிருஷ்ணனால் புதிதாக உருவாக்கப்பட்ட நகரம் துவாரகை.

* இரவில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வது மிகவும் சிறப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us