தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : செப் 10, 2021 09:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2021 09:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக.27, ஆவணி 11: திருச்செந்துார், பெருவயல் முருகன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு

ஆக.28, ஆவணி 12: திருச்செந்துார் முருகன் சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் பவனி, திருப்போரூர் முருகன் அபிேஷக ஆராதனை விழா, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருமஞ்சனம், பெருவயல் முருகன் பவனி, குச்சனுார் சனீஸ்வரர் அபிேஷகம்

ஆக.29, ஆவணி 13: கார்த்திகை விரதம், திருச்செந்துார் முருகன் காலையில் பூங்கோயில் சப்பரம், இரவு தங்க முத்துக்கிடா வாகனம், அம்மன் வெள்ளி அன்ன வாகனம், பெருவயல் முருகன் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் அனுமன் திருமஞ்சனம், பழநி முருகன் புறப்பாடு

ஆக.30, ஆவணி 14: கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, திருச்செந்துார் முருகன் வெள்ளியானை வாகனம், அம்மன் வெள்ளி சரப வாகனம், சென்னை திருவல்லிக்கேணி பெருமாள் திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், பெருவயல் முருகன் பவனி

ஆக.31, ஆவணி 15: பாஞ்சராத்ர ஜெயந்தி, மதுரை நவநீதகிருஷ்ணர் உற்ஸவம், திருச்செந்துார் முருகன் தங்க மயில் வாகனம், சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்

செப்.1, ஆவணி 16: முகூர்த்தம், மதுரை நவநீத கிருஷ்ணர் உறியடி உற்ஸவம், தேரெழுந்துார், திண்டுக்கல், மிலட்டூர், தேவகோட்டை, உப்பூர், பிள்ளையார்பட்டி கோயில்களில் ஆவணி உற்ஸவம், திருச்செந்துார் முருகன் கோரதம், திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிேஷகம்

செப்.2, ஆவணி 17: ஏகாதசி விரதம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிம்ம வாகனம், மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி வீணை மோகினி அலங்காரம், திருச்செந்துார் முருகன் சிவப்பு சாத்தி புறப்பாடு, திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் உற்ஸவம் ஆரம்பம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us