தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 14, 2021 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2021 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* கல்வி, கலைகளில் சிறக்க அருள்புரிபவர் வித்யா கணபதி.

* விநாயக புராணத்தின் ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார்.

* கபில முனிவர் விநாயகர் மீது பாடியது காரியசித்தி மாலை.

* உணவில் விருப்பம் மிக்கவர் என்பதால் விநாயகரை போஜன பிரியர் என்பர்.

* விநாயகரின் மகளாக கருதப்படுபவர் சந்தோஷி மாதா.

* விநாயகரின் சின்னமாக கருதப்படுவது 'ஸ்வஸ்திக்'.

* மக்களிடம் நாட்டுப்பற்று வளர விநாயகரை வழிபட்ட தேசத்தலைவர் பாலகங்காதர திலகர்.

* சித்தி, புத்தி என்னும் இருவரை மணந்தவர் விநாயகர்.

* புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்ட புலவர் பாரதியார்.

* விநாயகரின் இருப்பிடம் ஆனந்த லோகம்.

* விநாயகருக்கு கணபதி என்றும் பெயருண்டு. 'க' என்ற எழுத்து ஞானம், 'ண' என்பது மோட்சம், 'பதி' என்பது தலைவன் என்பதையும் குறிக்கும்.

* முதன்முதலில் விநாயகருக்கு தோப்புக்கரணமிட்ட முனிவர் அகத்தியர்.

* ஜாதகத்தில் கேது புத்தி, திசை நடப்பில் உள்ளவர்கள் விநாயகரை வழிபடுவது நல்லது.

* 'ஓம் கம் கணேசாய நம' என 108 முறை ஜபிக்க விநாயகரின் அருள் கிடைக்கும்.

* ஆறு ஆதாரங்களில் விநாயகருக்கு உரியது மூலாதாரம்.

* புகழ் மிக்க எட்டு விநாயகர் கோயில்கள் மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரைச் சுற்றியுள்ளன.

* அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் விநாயகர் அருளால் நோய், பிறவிப்பிணி தீரும்.

* விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணால் ஆன விநாயகரை வழிபடுவது சிறப்பு.

* இலங்கை, பர்மா, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளில் விநாயகர் வழிபாடு உள்ளது.

* சதுர்த்தி விரதமிருந்ததன் பலனாக பார்வதி சிவபெருமானை மணந்தாள்.

* பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 - காலை 6:00 மணிக்குள் கணபதி ேஹாமம் செய்வது சிறப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us