ADDED : ஜூலை 07, 2022 10:00 AM

அ நிறம் | அளவு
* பூஜை அறையில் சுவாமி படங்களுடன் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது.
* சிரித்த முகத்துடன் இருந்தால், பல நன்மைகள் கிடைக்கும்.
* கோயிலில் விளக்கேற்றுவதற்கு கொடுத்த நெய், எண்ணெய்களை மீதம் இருந்தால் அங்கேயே வைத்துவிடுங்கள்.
* சாப்பிடும் போது செருப்பை கழற்றுங்கள். இது உணவிற்கு தரும் மரியாதை. உணவை குறைகூறாதீர்.
* காலை 7:00 மணிக்குள் சூரியனை வணங்க வேண்டும்.
* சிறைச்சாலைக்குச் செல்வது போல் கனவு கண்டால், நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.
* பணக்கஷ்டத்தில் இருந்தாலும் பழைய கம்பி, இரும்புச் சாமான்களை வீடு கட்ட பயன்படுத்தக்கூடாது
