ADDED : மே 22, 2023 07:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ராமாயணத்தில் சீதாதேவியையும், மஹாபாரதத்தில் திரவுபதியையும் வைத்து அதர்மங்கள் அழிக்கப்படுகின்றன. காலையில் எழுந்தவுடன் இவர்களை வழிபட்டால் பாவம் தீரும்.
* ஆதரவற்ற மூதாட்டிக்கு பண உதவி செய்யுங்கள். பாதியில் நின்ற கட்டட பணிக்கு எதிர்பாராத
இடத்தில் இருந்து பொருளுதவி கிடைக்கும்.
* தண்ணீரில் கைப்பிடி அளவு உப்பை கரைத்த பிறகு குளியுங்கள்.
பிள்ளைகளின் திருமணப் பேச்சை முனைப்புடன் பேசி வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யுங்கள். அதுவும் தர்மமாகும்.
* சகோதரரிடம் பணத்திற்காக சண்டையிடாமல் விட்டுக்கொடுங்கள். தொழிலில் லாபம் வரும்.

