ADDED : மார் 19, 2014 01:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சகலகலாவல்லி மாலை எழுதியவர்......
குமரகுருபரர்
2. ராமர் மீது தாலாட்டு பாடிய ஆழ்வார்.....
குலசேகராழ்வார்
3.முதல் மூன்று ஆழ்வார்கள் சந்தித்த திவ்யதேசம்.......
திருக்கோவிலூர்
4. சித்தாந்த அட்டகம் என்னும் எட்டுநூல்களை எழுதியவர்.....
உமாபதி சிவம்
5. 'சகல ஆகம பண்டிதர்' எனப் பெயர் பெற்றவர்......
அருணந்தி சிவாச்சாரியார்
6. திருமால் மீது அதிக பாசுரங்களைப் பாடிய ஆழ்வார்.......
திருமங்கையாழ்வார்
7. ஞானசம்பந்தரால் பாராட்டப்பட்ட பாண்டிய அரசி........
மங்கையர்க்கரசி
8.சிவனடியார் குறித்து சுந்தரர் பாடிய நூல்........
திருத்தொண்டர்த் தொகை
9. கும்பகர்ணன் என்பதன் பொருள்......
குடம் போல காது உடையவன்
10.யாகம் செய்வது பற்றி விவரிக்கும் வேதம்.......
யஜுர் வேதம்