sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

திருவாசகம் - பாடல் - 150 - மாணிக்க வாசகர் பாடுகிறார்

/

திருவாசகம் - பாடல் - 150 - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - பாடல் - 150 - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - பாடல் - 150 - மாணிக்க வாசகர் பாடுகிறார்


ADDED : நவ 26, 2010 03:27 PM

Google News

ADDED : நவ 26, 2010 03:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்தன்ன வெண்நகையாய்! முன்வந்து எதிர்எழுந்து என்

''அத்தன்! ஆனந்தன்! அமுதன்!''என்று அள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய்! வந்துன் கடைதிறவாய்!

பத்துடையீர்! ஈசன் பழஅடியீர்! பாங்கு உடையீர்!

புத்தடியோம்! புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ?

எத்தோநின்! நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?

இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல்ஓர் எம்பாவாய்!

பொருள்: உறங்கும் தோழியை எழுப்ப வந்த பெண்கள்,'' முத்துப்போல வெண்மையான

பற்களைக் கொண்டவளே! இதற்கு முன்பெல்லாம் நீயாகவே எழுந்து வந்து, என்  அப்பனே! அன்புக்குரியவனே! அமுதம்  போன்றவனே! என்று பலவாறு வாய்மணக்கப் பேசி மகிழ்வாயே! நீயாக வந்து வாசலைத் திற,'' என்றனர்.  உள்ளிருந்த தோழி,'' நீங்கள் சிவபெருமானிடம் இடைவிடாத அன்பு கொண்டவர்கள். வழிவழியாக வந்த அடியார் குடும்பத்தில் பிறந்தவர்கள். வழிபடவேண்டிய வழிமுறை அறிந்தவர்கள். நானோ பக்திக்குப் புதியவள். அதனால், என் அறியாமையைப் பெரிதுபடுத்தாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். சித்தத்தில் சிவனைப் போற்றுபவர்கள் சிவனின் பெருமைகளை மட்டும் தானே போற்றுவர்கள்,'' என்றாள்.  ''நீ சொன்னது எங்கள் காதில் விழுந்தது. உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இதெல்லாம் வேண்டியது தான்!'' என்று செல்லமாகக் கோபித்துவிட்டு, ''சரி! சீக்கிரம் வா!'' என்று மீண்டும் அப்பெண்ணை நீராடுவதற்கு அழைத்தனர்.






      Dinamalar
      Follow us