ADDED : அக் 20, 2016 11:46 AM

அ நிறம் | அளவு
கஜவக்த்ரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ணசாமர பூஷிதம்!
பாஸாங்குஸதரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்!!
பொருள்: யானை முகம் கொண்டவரே! தேவர்களில் சிறந்தவரே! சாமரம் போன்ற அழகான காதுகளைக் கொண்டவரே! பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை கையில் ஏந்தியவரே! தேவர்களுக்கும், பூதகணங்களும் தலைவரான விநாயகப் பெருமானே! உம்மை வணங்குகிறேன்.
குறிப்பு: கணாஷ்டக ஸ்லோகம்
