
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஸ்வேஸ்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய ஸஸிசேகரதாரணாய!
கர்பூர காந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்கஹனாய நம ஸிவாய!!
பொருள்: உலகை ஆள்பவனே! நரகம் என்னும் கடலைக் கடக்கச் செய்பவனே! காதுகளுக்கு இனிமை சேர்க்கும் திருநாமம் கொண்டவனே! சந்திரனைத் தலையில் சூடியவனே! கற்பூர ஒளியாகப் பிரகாசிப்பவனே! ஜடா முடி உடையவனே! வறுமை, கவலையைப் போக்குபவனே! சிவபெருமானே! உன்னை வணங்குகிறேன்.