
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனந்த தாயினி பராவா ஸாக்ஷிபூதே
நாராயணி ச்ரித ஜனாவன பாரிஜாதே!
ப்ருந்தார கேட்யசரிதே மஹனீய மூர்தே
ஸெளந்தர்ய வல்லி சரணௌ சரணம் ப்ரபத்யே!!
பொருள்: மகிழ்ச்சியை அளிப்பவளே! எல்லா உலகங்களுக்கும் சாட்சியாக இருப்பவளே! நாராயணியே! நாடி வந்தவருக்கு கற்பக மரமாக வாரி வழங்குபவளே! தேவர்களால் துதிக்கப்படுபவளே! மகிமை நிறைந்தவளே! சவுந்தர்யவல்லித்தாயே! உன் பாத கமலங்களைச் சரணடைகிறேன்.