
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாஸ யஜ்ஞஸூத்ர மிந்து சேகரம் க்ருபாகரம்!
நாரதாதி யோகி வ்ருத்த வந்திதம் திகம்பரம்
காசிகாபுராதிநாத கால பைரவம் பஜே!!
பொருள்: தேவேந்திரனால் வணங்கப்படுபவரே! புனிதம் மிக்க திருவடிகளைப் பெற்றவரே! பாம்பைப் பூணூலாக அணிந்தவரே! தலையில் சந்திரனைச் சூடியவரே! கருணை புரிபவரே! நாரதர் மற்றும் யோகிகளால் பூஜிக்கப்படுபவரே! திசைகளை ஆடையாக உடுத்தியவரே! காசியின் ஆதிநாதரே! கால பைரவரே! உம்மைப் போற்றுகிறேன்.