
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஷ்ணு காந்தே மகாலக்ஷ்மி பூர்வா ஸந்த்யா பரவர்த்ததே!
உத்திஷ்ட்ட சேஷ ப்ரயங்காத கர்த்தவ்யம் தைவ மா ஹிநிகம்!
உத்திஷ்ட்டோத் திஷ்ட்ட கோவிந்தப்ரியே ஜாக்ருஹி ஜாக்ருஹி!
ஸிந்துஜே ஜகதம்பத்வம் த்ரிலோகீ மங்களம் குரு!!
பொருள்: விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமியே! சூரியன் உதயமாகி விட்டது. நாங்கள் செய்யும் பூஜையை ஏற்க, உன் நாதனோடு பாம்பணையில் இருந்து விழித்து எழுவாயாக. கோவிந்தன் பத்தினியே! கருணைவடிவே! பக்தர்கள் மீது அன்பு மிக்கவளே! கடலரசன் மகளே! லோகமாதாவே! மூவுலகத்திற்கும் மங்களத்தைத் தந்தருள்வாயாக.
குறிப்பு: மகாலட்சுமி ஸ்தோத்திரத்தில் இந்த ஸ்லோகம் உள்ளது.