தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வெற்றி பெற...

வெற்றி பெற...

வெற்றி பெற...


ADDED : ஜூலை 12, 2022 12:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2022 12:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை நடைபெறுவதை பார்த்திருப்போம். அதற்கான காரணம் என்ன?

* மும்மூர்த்திகளின் உறைவிடம் வில்வம். மூன்று இலைகளை கொண்ட வில்வத்தில் நடு இலை சிவபெருமானையும், இடது இலை பிரம்மாவையும், வலது இலை பெருமாளையும் குறிக்கும்.

* இதை பூஜைக்கு ஒருமுறை பயன்படுத்தி இருந்தாலும், தண்ணீரில் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

* கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலுரம் எனப் பல பெயர்களில் இதை அழைப்பர்.

* இதன் இலை, பூ, காய், பழம், வேர், பட்டை என அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.

* சிவபெருமானுக்கு ஞாயிறு அன்று வில்வ அர்ச்சனை செய்வது விசேஷம்.

* வீட்டில் வில்வமரம் இருந்தால் 'அஸ்வமேத யாகம்' செய்த பலன் உண்டு. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கும். ஆனால் மரத்தை பக்தி சிரத்தையோடு வளர்க்க வேண்டும்.

* வில்வ இலையால் சிவபெருமனை பூஜிப்பவர்கள் வெற்றி பெறுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us