ADDED : ஜூன் 12, 2016 03:07 PM

அ நிறம் | அளவு
1. ஆதிசேஷனின் அம்சமாக கருதப்படும் முனிவர்......
பதஞ்சலி
2. இசை பற்றிய குறிப்பு அடங்கிய வேதம்..........
சாம வேதம்
3. துரியோதனனின் ஒரே சகோதரி.........
துச்சளை
4. இந்திரனின் மகனான வானர வீரன்.......
வாலி
5. லாஸ்யம் என்னும் நடனம் ஆடுபவள்........
பார்வதி
6. சிவன் எமனை காலால் உதைத்த தலம்.......
திருக்கடையூர் (அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில்)
7. கவுசிக முனிவர் என அழைக்கப்பட்டவர்........
விஸ்வாமித்திரர்
8. மூன்றாம்படை வீடான பழநியின் புராணப்பெயர்..........
திருஆவினன்குடி
9. அத்வைதம் என்னும் தத்துவக் கொள்கைக்குரிய மகான் .......
ஆதிசங்கரர்
10. நாரதரின் கையில் உள்ள வீணை........
மகதி
