ADDED : ஜூன் 25, 2026 11:11 AM

அ நிறம் | அளவு
கங்கை பல இடங்களில் ஓடினாலும், காசி நகரில் நீராடுவது புனிதமாகக் கருதப்படுகிறது. கங்கையில் உள்ள 64 படித்துறைகளில் மணிகர்ணிகா சிறப்பானது. இங்குள்ள விஸ்வநாதர் கோயில் அந்நியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது.
இப்போதுள்ள கோயில் குவாலியர் மகாராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங் இதற்கு தங்கக்கூரை வேய்ந்தார். காசி, மதுரா, துவாரகை, அயோத்தி, ஹரித்துவார், காஞ்சிபுரம், அவந்திகா என்னும்
ஏழு முக்தி (பிறப்பற்ற நிலை) தலங்களில் காசியே முதன்மையானது. இதனால் வாழ்வின் கடைசி காலத்தை இங்கு கழிப்பது மோட்சத்தை தரும்.
