தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/60ம்... 80ம்...

60ம்... 80ம்...

60ம்... 80ம்...


ADDED : நவ 20, 2025 01:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 01:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க 60 வயது பெண் ஒருவர் வந்தார். அப்போது சுவாமிகளுக்கு தொண்டு செய்தவர் ஏகாம்பரம். அந்த பெண் தன் விருப்பத்தைச் சொல்வதைக் கேட்டு அவருக்கு தலை சுற்றியது.

நமஸ்காரம் செய்த அந்த பெண், 'பெரியவா... எனக்கு கல்யாணம் ஆகலே... வாழ்க்கை இப்படியே போகட்டும்னு சும்மா இருந்துட்டேன். ஆனால் இப்போ சுமங்கலியா சாகிற மாதிரி கனவு கண்டேன். அதில் இருந்து என் மனசுக்குள்ளே திருமணம் செய்ய வேண்டும் என இனம் புரியாத தவிப்பு உண்டாகிறது' என்றார்.

சஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் 60 வயதில் திருமணமா... என அங்கிருந்த பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். இருந்தாலும் சுவாமிகள் என்ன சொல்லப் போகிறார் என காத்திருந்தனர்.

மஹாபெரியவர் என்ன சொன்னார் தெரியுமா?

ஏகாம்பரத்தை அழைத்து, 'உடனே போய் திருவாரூர் வெங்கடராமய்யரை கூப்பிட்டு வா' என்றார். மஹாபெரியவரை விட நான்கு வயது மூத்தவரான அவருக்கு வயதோ 80. மஹாபெரியவருக்கு சேவை செய்வதில் விருப்பம் கொண்டவர் அவர். சுவாமிகளிடம் சந்நியாசம் தரும்படி கேட்பதை வழக்கமாக கொண்டவர். அவரை சிறிது நேரத்தில் அழைத்து வந்தார் ஏகாம்பரம்.

நமஸ்காரம் செய்த வெங்கடராமய்யரிடம், 'இதோ நிக்கறாளே... இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?' எனக் கேட்டார் சுவாமிகள். பதட்டமுடன் எழுந்த அவர், 'இதென்ன விளையாட்டு பெரியவா... சந்நியாசம் வேணும்னு கேட்கிற என்னிடம் இப்படி கேட்கிறேளே...' எனச் சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக நடையைக் கட்டினார் அந்த 80 வயது வெங்கட்ராமய்யர்.

அதன் பின் அந்த பெண்ணிடம், 'உன் கனவு பலிக்கணும்னா இதோ போனாரே... இவர் தான் மனசு வைக்கணும்' என்றார். அதாவது 'வாய்ப்பு இல்லை' என்பதை மறைமுகமாக அந்த 60 வயது பெண்ணுக்கு உணர்த்தினார் மஹாபெரியவர். குழப்பம் நீங்கிய அந்த பெண் மீண்டும் வணங்கி புறப்பட்டார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யாதே.

* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us