ADDED : நவ 28, 2024 01:45 PM

உலகின் ஆதாரம்
அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் ராமசாமி தாத்தாவின் வீட்டுக்கு வந்தான் கந்தன். '' நீங்களும் இதுவரைக்கும் எத்தனையோ திருக்குறளை சொல்லியிருக்கீங்க. ஆனால் முதல் திருக்குறள் பற்றி இதுவரை எதுவும் சொல்லலையே?'' எனக் கேட்டான்.
''அவசியம் சொல்றேன். பகவான் கிருஷ்ணன் கீதையில் என்ன சொல்கிறார் தெரியுமா... அழிவே இல்லாதவர் கடவுள். உலகின் ஆதாரமாக இருப்பவர் அவரே. அட்சர(எழுத்து) வடிவமாக இருப்பவரும் அவரே. கடவுளின் மேலான குணத்தை அறிவதே ஞானம்.
கீதையின் எட்டாம் அத்தியாயம் 3ம் ஸ்லோகத்தில்
ஸ்ரீப 4க³வாநுவாச
அக்ஷரம் ப் ³ரஹ்ம பரமம் ஸ்வபா4வோ 5த்4யாத்மமுச்யதே |
பூ4தபா4வோத் ³ப4வகரோ விஸர்க ³: கர்மஸம்ஜ்ஞித: || 8-3||
''அழிவற்ற பரம்பொருளே கடவுள். அவரின் இயல்பை அறிவதே ஆத்ம ஞானம். உயிர்த்தன்மையை விளைவிக்கும் இயற்கையே கர்மம்'' என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
இதே கருத்தை முதல் திருக்குறளில்,
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'
என்கிறார் திருவள்ளுவர்.
எழுத்துக்கு எல்லாம் முதலாவதாக 'அ' இருப்பது போல பகவானை முதலாக கொண்டது இந்த உலகம். அவரே முதலாக இருந்து உயிர்களை இயக்குகிறார். எந்த மொழியாக இருந்தாலும் அதில் முதல் எழுத்து 'அ' என்பது குறிப்பிடத்தக்கது.'' என்றார் தாத்தா.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554