ADDED : மே 07, 2026 08:34 AM

சென்னையைச் சேர்ந்த பிரபலமான நரம்பியல் நிபுணர் அவர். காஞ்சிபுரத்திற்கு மஹாபெரியவரை தரிசிக்க பலமுறை வருவது அவரது வழக்கம். அதனால் மடத்தைச் சேர்ந்த தொண்டர்களுக்கு நன்றாக அறிமுகமானவர் அவர். ஒருமுறை சுவாமிகளை தரிசிக்கும் முன் தொண்டர் ஒருவரை பார்த்தார்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு
யானை தேவைப்படுது. உங்களால யானையை தானம் செய்ய முடியுமா' என டாக்டரை பார்த்துக் கேட்டார்.
யானை தானம் என்பது சாதாரண விஷயம் இல்லையே... அதற்கு சாஸ்திர விதிமுறை, அரசின் அனுமதி, வனத்துறையின் வழிகாட்டுதல் என பல நடைமுறைகள் உண்டு. அத்துடன் யானையை பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும். தானம் செய்த பின்னர் அதற்கான பராமரிப்புச் செலவை யார் செய்வது என மனதிற்குள் எண்ணியபடியே, 'அந்த அளவுக்கு என்னிடம் வசதியில்லை' என்றார் டாக்டர்.
'நான் கேட்டதால் தானே யோசிக்கிறார். மஹாபெரியவா கேட்டா உடனே சம்மதிப்பார்' என நினைத்தார் தொண்டர்.
மஹாபெரியவரிடம் ஆசி பெற டாக்டர் நின்ற போது, ஏற்கனவே அவரை சந்தித்த தொண்டர், ''ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு யானை தானம் செய்யணும்னு டாக்டர் ஆசைப்படுறார். பெரியவா தான் அவரை ஆசிர்வதிக்கணும்'' என்றார்.
நான் சொல்லாததை பெரியவாளிடம் இப்படி சொல்கிறாரே? என அதிர்ச்சி அடைந்தார்.
டாக்டரின் எண்ணத்தை அறியாதவரா சுவாமிகள்? காதில் விழாதது போல அருகில் இருந்த பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். தான் சொல்வதை மஹாபெரியவர் கவனிக்கவில்லையோ என தொண்டர், மீண்டும் அதையே சொன்னார். அப்போதும் சுவாமிகள் பொருட்படுத்தவில்லை.
டாக்டரை பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார் தொண்டர்.
யாருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் காஞ்சி மஹாபெரியவர் எந்தளவுக்கு உறுதியானவர் என்பதை எடுத்துக் காட்டும் சம்பவம் இது.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
