சிறுவயது முதல் காஞ்சி மஹாபெரியவரின் பக்தையாக வாழ்ந்தவர் செல்லம்மா பாட்டி.
காஞ்சிபுரம் தான் என்றில்லை... சுவாமிகள் காசியில் இருந்தாலும் தனியாக அங்கே சென்று விடுவார். அப்படி ஒரு குருபக்தி.
ஒருமுறை காசியில் முகாமிட்டிருந்தார் மஹாபெரியவர். தரிசிக்க செல்லம்மா பாட்டியும் அங்கு சென்றார். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தைக் காண விரும்பினார். முகாமிற்கு வந்திருந்த தன் வயதை ஒத்த இரண்டு பெண்களுடன் படகில் புறப்பட்டார். மூவரும் படகில் கிளம்பினர். அமைதியாக சென்று கொண்டிருந்த படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து, யமுனையை நோக்கித் திரும்பியது.
எப்படி முயற்சித்தும் படகோட்டியால் சமாளிக்க முடியவில்லை. படகில் வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என படகோட்டி தவித்தான். மூவரையும் பார்த்து 'சுவாமியைக் கும்பிடுங்கள்' எனக் கத்தினான். படகோட்டி சொன்னதும் செல்லம்மா பாட்டி 'மஹாபெரியவா... காப்பாத்துங்கோ' எனக் கத்தினார். மற்றவர்களும் பாட்டியுடன் சேர்ந்து கத்தினர். அடுத்த நொடி மணல்மேட்டில் துடுப்பு பதிய, தடுமாறிய படகு கட்டுபாட்டிற்கு வந்தது. படகோட்டியும் வானத்தைப் பார்த்து வணங்கினான். முகாமிற்கு வந்ததும் மஹாபெரியவரிடம் நடந்ததை விவரித்தார் பாட்டி.
'எல்லாம் சரி... யமுனையில் ஏது மணல்மேடு?' எனச் சிரித்தார் காஞ்சி மஹாபெரியவர். 'ஆமாம் பெரியவா... மணல் மேட்டில் துடுப்பு பதிந்ததால்தான் உயிர் பிழைத்தோம்' என்றாரே தவிர அவருக்கு பதில் தெரியவில்லை. அப்போது பாட்டியின் மனதிற்குள் மின்னல் வெட்டவே நடந்த உண்மை புரிந்தது. யமுனாநதியில் இல்லாத மணல்மேட்டை உண்டாக்கி ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மஹாபெரியவரின் மகிமையை உணர்ந்தார். ஆனந்தக் கண்ணீருடன் பாட்டி வணங்க ஆசியளித்தார் காஞ்சி மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யாதே.
* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.comமஹாபெரியவரின் கருணை

swami1964@gmail.com