தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/முன்னோரின் ஆசிக்கு...

முன்னோரின் ஆசிக்கு...

முன்னோரின் ஆசிக்கு...


ADDED : அக் 08, 2026 01:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 01:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னோருக்கு தர்ப்பணம், திதி கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்துவது அவசியம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

பெற்றோரை மரியாதை, பணிவுடன் நடத்துங்கள். அவர்களின் தேவை அறிந்து நிறைவேற்றுங்கள். நீங்கள் என்ன செய்தாலும் அவர்கள் செய்த தியாகத்திற்கு ஈடாகாது.தர்ப்பணம் கொடுக்கும் போது எள், தண்ணீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாட்டை படைக்கிறோம். அவை அதே இடத்தில் தான் இருக்கிறது அல்லது நம் கண் முன்னால் ஒருவர் அதை எடுத்துச் செல்கிறார்.

'முன்னோர் எங்கோ மறுபிறப்பு எடுத்து விட்டதாகச் சொல்கிறீர்கள். அப்படி இருக்கும்போது இங்குள்ள பொருள் அவர்களிடம் எப்படி போய்ச் சேரும்' என்ற எண்ணம் நாத்திகரைப் போல உங்களில் சிலருக்கு வரலாம்.

ஒரு பையன் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவன் பரீட்சைக்கு பணம் கட்டணும்... உடனே பணம் அனுப்பும்படி அப்பாவுக்கு கடிதம் எழுதினான். அப்பாவும் போஸ்ட் ஆபீஸுக்கு போய் அவனுக்கான பணம் கட்டினார். அவர் அனுப்பிய அந்த பணம் (ரூபாய் நோட்டுகள்) அப்படியே போய்ச் சேராது. அதற்கு பதிலாக அந்த தொகைக்குரிய வேறு ரூபாய் நோட்டுகள் அவனிடம் கொடுக்கப்படும். இதுவே தபால் ஆபீஸ் நடைமுறை.

சாஸ்திரப்படி நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் பிதுர்தேவதை சேர்க்கிறது. நம் முன்னோர் இந்தப் பிறவியில் ஒருவேளை மாடாகப் பிறந்திருந்தால், பிதுர்தேவதை அதை வைக்கோலாக கொடுக்கும். அவர்கள் குதிரையாகப் பிறந்திருந்தால் கொள்ளு தானியமாக கொடுக்கும்.

பிதுர் தேவதைக்கு இப்படி ஒரு தெய்வீக சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதனால் முன்னோர் நம் முன் காட்சியளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாஸ்திரம் வகுத்தபடி தர்ப்பணத்தை செய்தால் போதும். இது உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் நன்மை தரும். ஆடி, மகாளய, தை அமாவாசை அன்று தர்ப்பணம், திதி கொடுத்து முன்னோர் ஆசியை பெறுங்கள்'' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

நினைத்தது நடக்க...

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவனே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us