தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நல்ல தீர்ப்பு

நல்ல தீர்ப்பு

நல்ல தீர்ப்பு


ADDED : பிப் 19, 2026 01:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 01:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சி மடத்தின் வாசலில் சிலர் புத்தகம் விற்றுக் கொண்டிருந்தனர். மடத்தைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கும் புத்தகத்தை விற்பதுதான் அவர்களின் நோக்கம். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விற்பவரிடம் இது பற்றி கேட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்காது என்பதால், மஹாபெரியவரிடம் புகார் செய்ய மடத்திற்குள் சென்றனர்.

அவர்கள் ஆவேசமாக சொல்ல சுவாமிகள் பொறுமையாக கேட்டார். பின் ஒரு தொண்டரை அழைத்து, 'ஸ்ரீமடம் பற்றிய புத்தகங்களை வாசல்லே விக்கிறாங்களாம். அத்தனை புத்தகத்தையும் பணம் கொடுத்து வாங்கி வா' என்றார். ஆவேசமாக வந்த பக்தர்கள் இதைக் கேட்டதும் நிம்மதி அடைந்தனர்.

சுவாமிகளே புத்தகங்களை விலைக்கு வாங்கினால் கடையை எடுத்து விடுவார்கள் என நம்பினர். புத்தகத்தை பற்றி இனி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என திருப்தி அடைந்தனர். ஆனால் நடந்ததோ வேறு... புத்தகங்களை வாங்கி வந்தவரோ, சுவாமிகளின் முன் அத்தனையையும் வைத்தார்.

அதை பார்த்த சுவாமிகள், ''இங்கு உள்ளவர்களுக்கு ஒவ்வொரு புத்தகத்தையும் கொடு. அதை படிச்சுப் பார்க்கட்டும். இஷ்டம் இருக்கிறவா மடத்திற்கு வரட்டும்' என்றார். இதைக் கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'இந்த புத்தகம் கடையிலேயே இருந்திருக்கலாம். யாரும் பணம் கொடுத்து வாங்கப் போறதில்லை. ஏன் பெரியவா இப்படி செய்றார்' என ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா... நெருப்பில் இட்டாலும் புடமிட்ட தங்கமாக 'தகதக' என ஜொலிப்பவர் காஞ்சி மஹாபெரியவர். இதற்கெல்லாம் கவலைப்படுவாரா என்ன?

நினைத்தது நடக்க...

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us