தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை


ADDED : ஜூன் 03, 2026 11:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 11:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சி மஹாபெரியவர் ஒருமுறை திருவண்ணாமலையில் கோயில் தரிசனம் முடித்ததும் கிரிவலம் செல்ல புறப்பட்டார். தொண்டர்கள் அவரை தொடர்ந்தனர். பகவான் ரமணரின் சீடர்கள் சிலர் பிட்சை பாத்திரத்துடன் எதிரில் வந்தனர்.

உணவுக்காக ஊருக்குள் தினமும் போய் பிட்சை பெற்று வருவது அவர்களின் வழக்கம். மஹாபெரியவரை பார்த்ததும் அவர்கள் தரையில் விழுந்து வணங்கினர். ஆசியளித்த மஹாபெரியவரிடம், 'பகவான் ரமணரோட சீடர்கள் நாங்கள். பகவான் அங்கேதான் மலையில இருக்கார்' என கையை மேலே காட்டினர்.

'அப்படியா...' என கேட்டு விட்டு சுவாமிகள் கிரிவலத்தை தொடர்ந்தார். 'என்னடா இது... ரமணர் நலமாக இருக்காரா... என ஒரு வார்த்தை கூட கேட்கலையே...' என தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஒருவேளை போகும் வழியில் திடீரென நின்று ரமணரைப் பற்றி விசாரிப்பாரோ என்ற எண்ணத்தில் அவரையே உற்று நோக்கினர். ஆனால் சுவாமிகளோ போய்க் கொண்டிருந்தார்.

வேறு வழியின்றி ரமணரின் சீடர்களும் மலையேறத் தொடங்கினர். பிட்சை பெற்ற உணவை ரமணரிடம் கொடுத்த போது, 'பகவானே... இப்போ கிரிவலப் பாதையிலே காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தோம். ஆனா அவர் உங்களைப் பத்தி ஒரு வார்த்தை கூட விசாரிக்கலை' என்றனர் சோகமாக.

'அட அசடுகளா... உங்களுக்குத் தான் உண்மை தெரியலை. நாங்க ரெண்டு பேரும் அப்போதே சந்தித்து விட்டோம். அவரும் என்னிடம் நலம் விசாரித்தார். இதோ இப்ப வரையும் அவரோட பேசிண்டு தான் இருந்தேன்' என்றார். சீடர்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை.

நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே நாம் பேசுவோம். ஆனால் ஆத்மார்த்தமாக பேசிக் கொள்ளும் மகான்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. நினைத்த நேரத்தில் எதுவும் அவர்களால் செய்ய முடியும்.

நினைத்தது நடக்க...

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us