தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பக்தி என்ன செய்யாது

பக்தி என்ன செய்யாது

பக்தி என்ன செய்யாது


ADDED : ஜன 22, 2026 12:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 12:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையைச் சேர்ந்த கணபதிராம் ஆப்பரேஷன் செய்வதற்காக மனைவியுடன் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. திரும்பி வர ஒரு மாதமாகும் என்பதால் யோசித்தனர். தினமும் மஹாபெரியவருக்கு செய்யும் பூஜை தடைபடுமே என வருத்தப்பட்டனர்.

சுவாமிகளின் திருவுருவப் படத்தின் முன் பாத்திரம் ஒன்றில் உலர் திராட்சையை நைவேத்யமாக வைத்தனர். 'ஊருக்குத் திரும்பியதும் வழக்கம் போல நாங்கள் பூஜை செய்கிறோம். அதற்காக எங்களை மன்னியுங்கள் பெரியவா. ஒரு மாதத்திற்கு இதை நைவேத்யமாக எடுத்துக் கொள்ளுங்கள்' என பிரார்த்தனை செய்தனர். சென்னைக்கு புறப்பட்டனர். ஆப்பரேஷன் நல்ல விதமாக நடந்தது. உடல்நிலை சரியானதும் திட்டமிட்டபடி மும்பைக்குத் திரும்பினர்.

வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக பூஜையறைக்கு சென்று மஹாபெரியவரை வணங்கினர். பிரசாதமாக வைத்த திராட்சையை சாப்பிடலாம் என பாத்திரத்தை திறந்த போது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

பாத்திரம் காலியாக இருந்தது. தம்பதியின் வேண்டுகோளை ஏற்று திராட்சைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டார் கருணைக் கடலான காஞ்சி மஹாபெரியவர்.

பக்தி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்? சிவானந்த லஹரியின் 63வது ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் சொல்வதைப் போல 'பக்தி கிம் நகரோதி' (பக்தி என்ன செய்யாது) அதாவது பக்தியால் எல்லாம் முடியும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இந்த ஆனந்தத்தில் இருந்து மீள கணபதிராம் தம்பதிக்கு நீண்டநேரம் பிடித்தது.

நினைத்தது நடக்க...

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

-நாராயணீயம்

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us