ADDED : மார் 19, 2026 01:43 PM

காஞ்சிபுரம் மடத்தில் 'ஸ்ரீமத் பாகவதம்' பற்றி கல்யாணராம சாஸ்திரிகள் உபன்யாசம் செய்தார். இதை மறைவான ஒரு இடத்தில் இருந்தபடி மஹாபெரியவர் கேட்டார். பகவான் கிருஷ்ணரின் திருவிளையாடல்களை ஸ்லோகம் மூலம் விளக்கிக் கொண்டிருந்தார் பாகவதர். தொடக்கத்தில் ஆர்வமாக கேட்ட பக்தர்கள் போகப் போக அதில் கவனம் செலுத்துவதை குறைத்தனர். சிலர் மற்றவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
சிலரோ எழுந்து சென்று விட்டனர். சாஸ்திரிகளின் நிலைமையை யோசித்தார் மஹாபெரியவர். பக்தர்கள் ஆர்வமாக இருந்தால் தான் பேசுபவருக்கு உற்சாகம் ஏற்படும். அதற்காக மடத்தின் தொண்டர் ஒருவரை பக்தர்களின் நடுவில் அமரச் சொன்னார். அவரும் மஹாபெரியவர் சொன்னபடி, 'கோவிந்த நாம சங்கீர்த்தனம்...' என உரத்த குரலில் சொன்னார்.
உற்சாகம் அடைந்த பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' எனக் கோஷமிட்டனர். அதன் பின் பக்தர்களின் நடுவில் வந்து நின்ற மஹாபெரியவர், 'மனுஷனோட வாழ்க்கையில பாதி நாள் துாக்கத்திலும், பொழுது போக்கிலுமாக வீணாகிறது. அதனால வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாகவதம், புராண கதைகளை கேட்கணும். உங்களோட உபன்யாசம் கேட்கலான்னு நானும் ஒரு ஓரமா இங்கு தான் உட்காந்திருக்கேன். இப்படி கேட்டா கடைசி காலத்தில போற வழிக்கு புண்ணியம் சேரும். உபன்யாசத்தை சிரத்தையா கேட்டு சாஸ்திரிகளுக்கு ஒத்தாசையா இருங்கோ...' என்றார் சுவாமிகள்.
உற்சாகத்துடன் உபன்யாசத்தை தொடர்ந்தார் சாஸ்திரிகள்.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
