தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தொட்டது துலங்கும்

தொட்டது துலங்கும்

தொட்டது துலங்கும்


ADDED : ஜூலை 11, 2025 09:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 09:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இலங்கை மன்னன் ராவணனின் மனைவியான மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் ராவணன் அசுரகுருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான். யாராலும் வெல்ல முடியாதபடி வீரமும், அழகும் கொண்டவனாக என் மகன் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசனை கேட்டான்.

''கிரகங்கள் அனைத்தும் ஒரே ராசியில் இருக்கும் நேரத்தில் பிறந்தால் எல்லாச் சிறப்பும் கொண்டதாக குழந்தை இருப்பான்'' என்றார் சுக்கிராச்சாரியார். உடனே வானில் சுழலும் கிரகங்களை பிடித்து சிறையில் அடைத்தான் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் செய்வதறியாமல் சிரமத்திற்கு ஆளாயினர்.

ராவணனுக்கு யோசனை கூறிய சுக்கிராச்சாரியாரைக் கடிந்து கொண்டனர். தாங்கள் அனைவரும் ஒரிடத்தில் இருப்பதால் உலக இயக்கம் தடைபடுமே என வருந்தினர். அதே நேரத்தில் பிரசவ வலி மண்டோதரிக்கு ஏற்பட்டாலும் குழந்தை பிறக்கவில்லை.

இந்தச் செய்தி கிரகங்களின் காதிற்கு எட்டியதும், அதற்கும் தாங்களே காரணம் என்று ராவணன் தண்டிப்பானோ என பயத்தில் ஆழ்ந்தனர். சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசித்தனர். ''இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், கிரகங்களுக்கு இணையான ஒரு புதியவனை சிருஷ்டிக்க வேண்டும். அவன் உருவாகும் அதேநேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் நடந்தால் எல்லாம் நன்மையாக நடக்கும்'' என்றார். உடனே சிறையில் இருந்தபடியே சனீஸ்வரர் தன் ஆற்றல் மூலம் ஜேஷ்டா தேவிக்கு மகன் பிறக்கச் செய்தார். அந்த புதல்வனுக்கு 'குளிகன்' எனப் பெயரிட்டனர்.

குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கும் அழகான ஆண்குழந்தை பிறந்தது. அவன் மாவீரனாகத் திகழ்வான் என்பதை உணர்த்தும் வகையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அதனால் மகனுக்கு 'மேகநாதன்' எனப் பெயரிட்டான் ராவணன். இளமைப் பருவத்தில் மேகநாதன் தவபலத்தால் பிரம்மாவிடம் இருந்து அபூர்வ அஸ்திரங்களைப் பெற்று, இந்திரனையே வென்றதால் 'இந்திரஜித்' என பெயர் பெற்றான்.

இந்திரஜித், குளிகன் இருவரும் பிறந்த சுபநேரமே குளிகை எனப்படுகிறது. ராவணனிடம் இருந்து விடுவிக்கச் செய்ததால் நவக்கிரகங்கள் குளிகனை பாராட்டினர். தினமும் பகலிலும் இரவிலும்

ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த நேரத்தை 'காரிய விருத்தி நேரம்' என்றும், இதில் தொடங்கும் நல்ல செயல்களால் குடும்பமே செழிக்கும் என்றும் ஆசியளித்தார் சுக்கிராச்சாரியார். குளிர்ந்த தன்மையைக் கொண்ட இவன், ஒவ்வொரு நாளிலும் நல்ல செயல்களை நடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவன். சனிக்கிழமையில் மாலை நேரத்தில் குளிகனை வழிபடுவது சிறப்பு.

சனீஸ்வரனை வழிபடும் போது குளிகனை மனதில் நினைக்க வேண்டும். குளிகை நேரத்தில் செய்யும் செயல் திரும்ப தொடரும் என்பதால் இறப்புச் சடங்குகள் உள்ளிட்ட அசுப நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. குளிகை நேரத்தில் நல்லதைச் செய்தால் தொட்டது துலங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us