தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஆசை முகம்

ஆசை முகம்

ஆசை முகம்


ADDED : ஜூலை 31, 2025 03:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோதாவரி நதிக்கரையில் வசித்த கேசவ பட்டர், அவரது தந்தையின் சிராத்த தினத்தன்று முன்னோர் கடனைச் செய்தார். அப்போது அறிமுகம் இல்லாத அந்தணர் ஒருவர் பட்டரின் வீட்டுக்கு வந்தார். அவருக்கு அறுசுவை அன்னமும், தட்சணையும் கொடுத்தனுப்பினார்.

அந்தணர் கிளம்பிய சிறிது நேரத்தில், பட்டருக்கு எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்தது. அவரது முகம் மட்டும் கழுதை முகமாக மாறியது. பயத்தில் அலறிய பட்டர், அகத்திய முனிவரின் ஆசிரமம் நோக்கி ஓடினார்.

அவரது திருவடியில் விழுந்து வணங்கினார். விஷயத்தை சொல்லும் முன்பே, அகத்தியர் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். ''இன்று உன் தந்தையின் சிரார்த்த நாளாயிற்றே....'' என்றார் அத்தியர்.

''ஆம்'' என தலையசைத்த பட்டரின் கண்களில் கண்ணீர்.

''சிராத்த நாளில் பாவி ஒருவனுக்கு உணவு அளித்ததால் நேர்ந்த கொடுமை இது. இருந்தாலும் உன் கவலை தீர்க்கும் மருந்து திருப்பதியில் உள்ளது. அங்குள்ள ஆகாச கங்கை தீர்த்தத்தில் நீராடி ஏழுமலையானைத் தரிசனம் செய். பழைய வடிவம் பெறுவாய்'' என்றார் அகத்தியர்.

ஆகாச கங்கையின் மகிமையால் கேசவ பட்டரின் ஆசை முகம் திரும்ப வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us