sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஊருக்கு ஒரு நல்லவர்

/

ஊருக்கு ஒரு நல்லவர்

ஊருக்கு ஒரு நல்லவர்

ஊருக்கு ஒரு நல்லவர்


ADDED : அக் 07, 2025 01:07 PM

Google News

ADDED : அக் 07, 2025 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இமயமலைச் சாரலில் வாழ்ந்த துறவி சோமதேவன். பசி, துாக்கத்தை மறந்து எப்போதும் தியானத்தில் இருப்பார். அவரது ஆன்மிக பலத்தை கண்ட தேவர்கள் விரும்பிய வரத்தைக் கொடுக்க காட்சியளித்தனர்.

''துறவியே! தியானத்தால் தெய்வ நிலைக்கு உயர்ந்து விட்டீர்கள். விரும்பிய வரத்தை இப்போது கேளுங்கள். தங்களை போன்ற நல்லவர்கள் உலக உயிர்களின் நலனுக்காக அதை பயன்படுத்துவீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்'' என்றனர்.

''தேவையில்லை'' என மறுத்தார் சோமதேவன். ஆனால் வற்புறுத்தவே,''கடவுளின் அருளை நான் பெற வேண்டும். மற்ற எதுவும் வேண்டாம்'' என்றார். தேவர்கள் விடுவதாக இல்லை.

''துறவியே! விருப்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உலக உயிர்களின் நோய் தங்களின் கை பட்டாலே தீர்க்கும் வரத்தை தருகிறோம். இதன் மூலம் புகழுடன் வாழலாம். மனிதன் பூமியில் வாழ்வதே புகழுக்காக தானே'' என்றனர்.

''தேவர்களே! புகழுக்காக செய்யும் செயல்கள் அர்த்தமற்றவை. நோயை தீர்ப்பது என் வேலையல்ல. எந்த கடவுள் உயிர்களை படைத்தாரோ அவரே நோயையும் போக்குவார். நோய் தீர்ந்தால் அனைவரும் என்னைப் புகழ்வர். அதன் பின் கடவுள் என்னும் ஒருவரை மக்கள் மறப்பார்களே'' என்றார். ''உண்மை தான்! உங்களுக்கே தெரியாமல் உயிர்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தருகிறோம்'' என்றனர் தேவர்கள்.

அதற்கும் துறவி சம்மதிக்கவில்லை. ''சேவையால் கிடைக்கும் புண்ணிய பலனும் எனக்கு வேண்டாம். அதுவும் கூட சுயநலம் தான்'' என்றார். இப்படி உயர்ந்த குணம் உள்ள துறவிக்கும் தெரியாதபடி, விசேஷ வரத்தை அளித்து தேவர்கள் மறைந்தனர். அதன் பின் சோமதேவன் எங்கு சென்றாலும், மக்களின் துன்பம் விலகியது. அவர் ஒரு ஊருக்குள் நுழைந்தால் வறட்சி நீங்கி மழை பெய்தது.

மக்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறின. நோய் நீங்கி உடல்நலம் பெற்றனர். இதை அறியாத சோமதேவனும் ஒரு சாதாரண துறவியாக வாழ்ந்து முக்தி அடைந்தார். 'சுயநலம் இல்லாத ஒருவர் வாழ்ந்தாலும் அனைவருக்கும் நன்மை' என அவ்வைப்பாட்டி சொன்னது சோமதேவனுக்கு பொருத்தம் தானே!






      Dinamalar
      Follow us