ADDED : செப் 18, 2026 08:00 AM

அ நிறம் | அளவு
திருப்பதி ஏழுமலை ஸ்ரீநிவாசனுக்கும், அலமேலு மங்கைக்கும் திருமணம் நடந்தது. அதில் பங்கேற்க வந்த பிரம்மா, ''ஏழுமலையானே! விருந்துக்காக உணவு வகைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.மகரிஷிகள், மகான்களெல்லாம் பசியோடு காத்திருக்கிறார்கள்.
இதை நைவேத்யம் செய்து விட்டு விருந்தினர்களுக்கு பரிமாறலாம். உணவை யாருக்கு நைவேத்யம் செய்வது?” எனக் கேட்டார்.
மகாவிஷ்ணுவே பூலோகத்தில் சீனிவாசனாக அவதாரம் எடுத்தாலும், மனிதனாக அவர் இருப்பதால் முதலில் கடவுளுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும் என்பதற்காக பிரம்மா இப்படி கேட்டார். உடனே அகோபிலம் நரசிம்மனுக்கு நைவேத்யம் செய்யும்படி கூறினார் ஸ்ரீநிவாசன். அவ்வாறே செய்யப்பட்டு விருந்தினர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.
