ADDED : செப் 18, 2026 08:01 AM

அ நிறம் | அளவு
திருப்பதி ஏழுமலையானுக்கு கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான் சக்கரவர்த்தி. இவர் தினமும் பெருமாளை தங்க தாமரை மலர்களால் வழிபட்டு வந்தார்.
ஒருநாள் பெருமாள் முன் மண்ணால் ஆன மலர்கள் கிடப்பதைக் கண்டார். இதற்கு காரணமானவர் யார் என்பதை பெருமாளிடம் கேட்டார்.
''குருவ கிராமத்தில் இருக்கும் பீமன் என்ற குயவனே காரணம். சனிக்கிழமை தோறும் விரதமிருக்கும் அவன், தினமும் பணியைத் தொடங்கும் முன் மண் மலர்களால் எனக்கு அர்ச்சனை செய்வான்.
அவனுடைய பக்தியை உலகறியச் செய்ய இந்த மண் மலர்களையும் ஏற்றுக் கொண்டேன்'' என அசரீரி கேட்டது. பணத்தை விட பக்திக்கே முதலிடம் என்பதை இந்த சம்பவம் மூலம் ஏழுமலையான் உணர்த்தினார்.
