தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கேட்டதும் கொடுப்பவனே...

கேட்டதும் கொடுப்பவனே...

கேட்டதும் கொடுப்பவனே...


ADDED : செப் 24, 2026 12:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோம்பேறி இளைஞன் ஒருவன் ஊர் சுற்றித் திரிந்தான். ஒருநாள் ஊரிலுள்ள சிவன் கோயிலில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடுவதைக் கேட்டான். அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம், “சிவ... சிவ” எனக் கூச்சல் போடுகிறீர்களே! அதனால் பசியால் வாடும் எனக்கு ஒரு வேளை சோறு கிடைக்குமா?” என கத்தினான்.

பெரியவர் அவனிடம், “சோறு மட்டுமல்ல, கேட்டது எல்லாம் கிடைக்கும்” என்றார்.

அந்த பெரியவர் சொல்கிறாரே என சிவ நாமத்தை சொல்ல முடிவெடுத்தான். ஊருக்கு அடுத்த காட்டுக்குள் சென்று கண்மூடி அமர்ந்தான். 'சிவ சிவ' என்பதை தவிர வேறு சிந்தனை அவனுக்கு இல்லை.

திடீரென யாரோ வருவது போல சப்தம் கேட்கவே மரத்தின் மீதேறி ஒளிந்தான் இளைஞன்.

கட்டுச்சோற்றுடன் வந்த ஒரு வழிப்போக்கன் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து உணவு சாப்பிட்டான். இளைஞனோ கண்ணை மூடியபடி ஜபித்துக் கொண்டிருந்தான். கண் விழித்த போது ஆச்சரியம் காத்திருந்தது.

ஒரு கட்டுச்சோறு பொட்டலத்தை மறந்து விட்டுச் சென்றிருந்தான் அந்த வழிப்போக்கன். சிவன் அருளால் தான் சோறு கிடைத்தது எனக் கருதி இறங்கினான். ஆனால் வந்த வேகத்தில் நின்றான்.

எவனோ ஒருவன் விட்டுப்போன சோற்றை சாப்பிடுவதா என யோசித்தான். சிவனின் கருணை இருந்தால் இந்த சோற்றை நான் சாப்பிடும் சூழ்நிலை வரும் என எதிர்பார்த்தான். மீண்டும் மரத்தின் மீதேறி அமர்ந்தான். மாலை நேரம் வந்தது.

காட்டில் சில திருடர்கள் வந்தனர். மரத்தடியில் அமர்ந்து திருடிய பணத்தை பங்கு வைக்கத் தொடங்கினர். அவர்களில் ஒருவன் இளைஞனைக் கண்டதும், வேவு பார்க்க வந்த ஒற்றன் எனக் கருதி அவனை மரத்தில் கட்டி வைத்தான்.

அதற்குள் பசியுடன் இருந்த மற்றொரு திருடன் உணவு பொட்டலத்தை எடுத்து பிரித்தான். “இதைச் சாப்பிடாதே. நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் வைத்திருப்பான். அதை இவனுக்கே கொடு” என தடுத்தான் மற்றொருவன். இளைஞனும் மறுக்காமல் சாப்பிட்டான்.

உணவால் பிரச்னை ஏதும் ஆகாததைக் கண்ட திருடர்கள், அதில் விஷம் இல்லை என அறிந்து மகிழ்ந்தனர். இளைஞனுக்கு அன்பளிப்பாக ஒரு தொகையை கொடுத்து விட்டு புறப்பட்டான் திருடன்.

''நம்பிக்கை இல்லாமல் 'சிவ சிவ' எனச் சொன்னதற்கே நன்மை கிடைத்ததே' என எண்ணிய இளைஞன் 'சிவ நாமமே மேலான செல்வம்' என்பதை உணர்ந்தான்.

அந்த பணத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்தான். இனி உழைத்து வாழ்வேன் எனக் கோயிலில் சபதம் செய்தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us