தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வரம் தருபவள்

வரம் தருபவள்

வரம் தருபவள்


ADDED : அக் 08, 2026 02:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம் பழஞ்சிறைதேவி கோயிலில் 'தோற்றப் பாட்டு' கேட்பவருக்கு கேட்ட வரம் கிடைக்கும். முன்வினைப்பாவம் தீரும்; விருப்பம் நிறைவேறும்.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என அழைத்தனர். இங்குள்ள நீலாற்றங்கரையில் தேவியின் தரிசனம் பெற வேண்டி தவமிருந்தார் யோகீஸ்வரர் என்ற முனிவர்.

அவருக்கு காட்சியளித்த தேவி, 'இங்கு என்னை பிரதிஷ்டை செய்வாய்' என சொல்லி மறைந்தாள். தேவி காட்சியளித்த கோலத்திலேயே சிலை வடித்து வடக்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர்.

பிற்காலத்தில் காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை கட்டப்பட்டதால் 'பழஞ்சிறை' எனப் பெயர் வந்தது. இங்கு அருள்புரியும் அம்பிகை பழஞ்சிறை தேவி எனப் பெயர் பெற்றாள். நினைத்தது நிறைவேற தேவிக்கு புடவை, செவ்வரளிப்பூக்கள் சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர். கொடுங்கல்லுார் தேவியின் அம்சமாக பழஞ்சிறைதேவி கருதப்படுகிறாள். கோயில் கட்டிய முனிவர் யோகீஸ்வரரின் சிலை அம்மனின் முன்பு உள்ளது. இவரை வழிபட்டு திருநீறு பூச குழந்தைகளுக்கு ஏற்படும் 'பாலாரிஷ்டம்' தோஷம் அகலும்.

இங்கு மாசிமாத மிருகசீரிட நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும்.

41 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் அப்போது 'தோற்றப்பாட்டு' என்னும் மலையாள கீதத்தை இசையுடன் பாடுவர். தேவி அவதரித்த வைபவம், அருள்புரியும் விதம் குறித்து இதில் வர்ணிக்கப்படும். இதைக் கேட்டால் கிரக தோஷம், முன்வினைப்பாவம், தடைகள் தீரும்.

மாசித்திருவிழாவின் ஆறாம்நாள் இரவில் நடக்கும் அத்தாழ பூஜையின் போது பெண் குழந்தைகளை தேவி போல வேடமிட்டு பூஜை செய்வர். இதனால் அவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். இந்நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்காக மாங்கல்ய பூஜை நடத்துவர்.

அதன்பின் நள்ளிரவில் நடக்கும் 'ஸ்ரீபூத பலி' என்ற பூஜையில் பூதகணங்களுக்கு பலியிடும் நிகழ்ச்சி நடக்கும். தேவியின் சிலம்பு, திரிசூலம், வாள், பட்டுவஸ்திரத்தை அணிந்தபடி பூஜாரி இதில் பங்கேற்பார்.

17 யானைகள், ஆறு சிங்க சிலைகள் கருவறையை சுமக்கின்றன. கருவறையின் மீது மும்மூர்த்திகள், மூன்று தேவியர், கங்கையுடன் கூடிய சிவன் சிலைகள் உள்ளன. கோயிலின் வெளியே சர்ப்பக்காவு என்னும் பகுதியில் ஆறடி உயர நாகராஜர் சிலை உள்ளது. இவருக்கு அபிஷேகம் செய்தால் கண், தோல் நோய், ராகு தோஷம் நீங்கும்.

எப்படி செல்வது: கிழக்குக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவளம் ரோட்டில் 5 கி.மீ.,

விசேஷ நாள்: நவராத்திரி, மாசித்திருவிழா.

நேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 94474 00300, 0471- 246 1037

அருகிலுள்ள கோயில்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி 5 கி.மீ., (நிம்மதிக்கு...)

நேரம்: அதிகாலை 4:15 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0471 - 245 0233

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us