sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் – 17

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் – 17

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் – 17

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் – 17


ADDED : ஜூன் 20, 2025 08:22 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 08:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்திரசித்தி அருளும் ஏகாட்சர கணபதி

மந்திரங்களில், 'கம்' என்ற பீஜம் அல்லது வித்து எழுத்து நிச்சயம் கஓடம்பெறும். இது பிரணவம் என்றே போற்றப்படும். இந்த எழுத்துக்குரிய திருவுருவமாக இந்த கணபதியே தியானிக்கப்படுகிறார். இவரது திருமேனியில் படர்ந்துள்ள பாம்புகள், இவர் யோகமூர்த்தி என்பதைக் காட்டுகின்றன.

தியான சுலோகம்

ரக்தோ ரக்தாங்க' ராகாம் சுக குஸுமயுதஸ் துந் தி' லஸ் சந்த்'ரமௌளி:

நேத்ரைர் யுக்தஸ் த்ரிபி: வாமந கர சரணோ பீ ஜபூரம் த'தாந: |

ஹஸ்தாக்'ரா க்லுப்த பாசாங்குச ரத' வரதோ' நாக' வக்த்ரோ Sஹி பூ'ஷோ -

தே'வ: பத்'மா ஸநஸ்தோ பவது சுக'கரோ பூ'தயே விக்நராஜ: II

ரக்த - சிவந்த திருமேனியரும்

ரக்த அங்க ராக - தம் திருமேனியில் (செஞ்சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்ந்த) சிவந்த நறுமணச் சாந்தினைப் பூசிக் கொண்டிருப்பவரும்

ரக்த அம்சுக - சிவந்த பட்டாடையை அணிந்திருப்பவரும்

ரக்த குஸுமயுத: - செந்நிற மாலையை அணிந்திருப்பவரும்

துந்தில: - பெருத்த வயிற்றை (தொந்தி) உடையவரும்

சந்த்ரமௌளி: - தம் திருமுடியில் பிறையை அணிந்திருப்பவரும்

த்ரிபி:' நேத்ரைர் யுக்த - முக்கண்களை உடையவரும்

வாமந கர சரண: - குட்டையான கை, கால்களை உடையவரும்

பீஜபூரம் த'தா'ந: - மாதுளம்பழத்தை (துதிக்கையில்) வைத்திருப்பவரும்

ஹஸ்தாக்²ர - கைகளில்

பாச - பாசம் எனும் ஆயுதத்தையும்

அங்குச - அங்குசம் எனும் ஆயுதத்தையும்

ரத் - தனது உடைந்த தந்தத்தையும்

வரத - வரத முத்திரையையும்

க்லுப்த - ஏந்திய

நாக வக்த்ர: - யானை முகத்தவரும்

அஹி பூ'ஷ: - பாம்புகளை ஆபரணங்களாக அணிந்திருப்பவரும்

தே'வ: - தேவனுமாகிய

பத்மாஸநஸ்த: - தாமரைப் பூவில் எழுந்தருளியிருப்பவரான

விக்னராஜ தடைகளின் தலைவனாகிய விக்னராஜ கணபதியானவர் (நமக்கு)

பூ'தயே - செல்வம் அருள்பவரும்

சுக கர: - சுகத்தை செய்பவருமாக

பவது - எனக்கு விளங்கட்டும்.

மாதுளம் பழம்: பிறவிப்பிணியைப் போக்கவல்ல இறைவன் கணபதி என்பதை விதை மிகுந்த இக்கனி உணர்த்துகிறது.

பாசம், அங்குசம்: உயிரின் ஆணவ மலத்தை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தைக் குறிப்பது அங்குசம்.

ஒடித்த தந்தம்: துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.

வரதம்: உயிர்கள் வேண்டுவன அளிப்பவர் கணபதி என்பதைக் காட்டும் முத்திரை

பலன்: அஷ்ட ஐஸ்வர்யம், மந்திர சித்தி, யோக சித்திகள் கிடைக்கும்



அருள் தொடரும்...

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்






      Dinamalar
      Follow us