ADDED : ஆக 01, 2025 07:52 AM

அதிகாரம் அருளும் ஸ்ருஷ்டி கணபதி
ருஷ்டி என்றால் படைப்பு என்று பொருள். படைப்புக்கான மூலமாக இரு கணபதி. கஜமுகாசுரனால் இவ்வுலகப் படைப்பும் இயக்கமும் தடைப் அவனை வென்று பெருச்சாளியாக மாற்றி தனது வாகனமாக ஆக்கிக் கெ அதன் பின் படைப்புத் தொழில் செம்மையாக நடைபெறவும் உலக இயக்கம் திரும்பவும் மூலகாரணமாக இருந்தவர் இந்த கணபதி.
தியான சுலோகம்
பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவாந் ஆகுவாஹந: |
விக்நம் நிஹந்து நஸ் சோண: ஸ்ருஷ்டி த க்ஷோ விநாயக: ||
பாசாங்குச - பாசம், அங்குசம் எனும் ஆயுதங்களையும்
ஸ்வதந்தம் - தனது ஒடித்த தந்தத்தையும்
ஆம்ர - மாம்பழத்தையும்
பலவாந் - (தனது கரங்களில்) ஏந்தியிருப்பவரும்
ஆகுவாஹந: - பெருச்சாளியை வாகனமாகக் கொண்டவரும்
சோண: - சிவந்த நிறமுடையவரும்
ஸ்ருஷ்டி தக்ஷ: - படைப்புத் தொழிலில் வல்லவரான
விநாயக: - தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாமல் தாமே பெருந்தலைவனாக விளங்கும் ஸ்ருஷ்டி கணபதியானவர்
ந: - நமது
விக்நம் - தடைகளை
நிஹந்து - நீக்கட்டும்.
பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.
மாம்பழம்: இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஒடித்த தந்தம்: நிறத்தால் துாய்மையானது: ஆயுதமாகவும் பயன்படுவது. அது மன உறுதியின் அடையாளம். இவ்விரண்டு தன்மையும் கர்மயோகத்திற்கு அடையாளம்.
அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது.
பெருச்சாளி வாகனம்: பதியாகிய இறைவன், பசுவாகிய ஆன்மாவுக்கு அருள்வதைக் குறிப்பது.
பலன்: தடைகள் நீங்கும்; இழந்த அதிகாரம் கிட்டும்; வெற்றி கிடைக்கும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்