தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/விரதம் இருந்தால்...

விரதம் இருந்தால்...

விரதம் இருந்தால்...


ADDED : மே 29, 2025 01:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 01:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனக்கட்டுப்பாடு வேண்டுமா... விரதம் அவசியம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

உடல்நலம் கருதியே நம் முன்னோர்கள் விரதங்களை உண்டாக்கினர். எப்போதும் எதையாவது சாப்பிட்டபடி இருந்தால், ஜீரண உறுப்புக்குத் தொடர்ந்து வேலை இருக்கும். அதற்கு ஓய்வு தர வேண்டாமா... அதற்காகத் தான் விரதம் இருக்கிறோம். விரதத்தை 'உபவாசம்' என்பர். 'உண்ணாமல் இருப்பது' என பொருள்.

'உப' என்றால் அருகில். 'வாசம்' என்றால் வசிப்பது. அதாவது 'அருகில் வசிப்பது' என்றும் இதற்கு பொருள் உண்டு. யாருக்கு அருகில் வசிப்பது? கடவுளுக்கு அருகில். அதாவது கடவுளை எப்போதும் சிந்திப்பது.

ஏகாதசி, கார்த்திகை போன்ற நாட்களிலும், செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளிலும் விரதம் இருப்பது அவசியம். விரத நாளில் உண்ணாமல் இருப்பதால் உடம்பில் உள்ள கொழுப்பு கரையும். விரதம் இல்லாவிட்டாலும் அளவோடு தான் உண்ண வேண்டும். விரதத்தன்று சாப்பிடாமல் இருப்பதால் முதலில் வயிறு மெல்ல சுருங்க ஆரம்பிக்கும். வயிற்றின் அளவு குறைந்தபின் சிறிதளவு உணவு சாப்பிட்டாலும் அதை நிறைவாக உணர முடியும். அதன் பின்னர் வயிறை பெருக்க விடாமல் குறைவாக உண்ண பழக வேண்டும்.

முதல் ஏப்பம் வரும் போதே உண்பதை நிறுத்துவது நல்லது. எப்போதும் பசி எடுத்த பிறகே உணவைத் தொட வேண்டும். சத்து, ஆரோக்கியம் நிறைந்த உணவை நிதானமாக ருசித்து அளவாக உண்ணுங்கள். அடிக்கடி நொறுக்குத் தீனியும் உண்ணக் கூடாது. இப்படி பயிற்சி எடுத்துக் கொண்டால் 'அதை சாப்பிடுவோமா... இதை சாப்பிடுவோமா...' என மனம் அலை பாயாமல் படிப்படியாக அடங்கும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் உணவுக் கட்டுப்பாடு 'ஆத்ம விசாரத்திற்கு' உதவும். ஆத்ம விசாரம் என்றால் மனத்துாய்மை. தவறான செயல்களில் நாம் ஈடுபடுவதற்கு மனமே காரணம். விரதத்தால் மனம் அடங்கும்; புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் வரும். அதன் பின் நல்லதை மட்டுமே அது சிந்திக்கும்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதே.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us