தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நினைத்தாலே புண்ணியம்

நினைத்தாலே புண்ணியம்

நினைத்தாலே புண்ணியம்


ADDED : பிப் 16, 2024 03:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 03:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சி மஹாபெரியவர் 1907 ல் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். அப்போது கும்பகோணத்தில் இருந்த சங்கரமடத்தின் நிதிநிலை மோசமாக இருந்தது. அப்போது மடத்தில் கணேச ஐயர் சமையல்காரராக குறைவான சம்பளத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது கடமை உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை. நாளடைவில் மடம் காஞ்சிபுரத்துக்கு இடம் பெயர்ந்த பின் பக்தர்களின் ஆதரவால் நிலைமை சீரானது.

இந்நிலையில் மடத்திற்கு வந்த ஒருவர், ''என் பெயர் நடேசன். கும்பகோணம் மடத்தின் சமையல்காரரான கணேச ஐயரின் மகன் நான்'' என்றார். ஆர்வமுடன் பார்த்த மஹாபெரியவரிடம்,

'' என் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. பெரியவாதான் உதவி செய்யணும்'' என வணங்கினார்.

அன்று பிட்சாவந்தனம் (சுவாமிக்கு காணிக்கை) செய்ய வந்த பக்தரான ஜகதீசனை நோக்கி, ''ஜகதீசா... நீ பிட்சாவந்தனத்தை வேறொரு நாளில் செய். இன்னிக்கு இவர் வீட்டு கல்யாணத்துக்கு உதவி செய்'' என்றார். ''என் பாக்கியம் பெரியவா'' என்ற அவர், நடேசனிடம் மணிபர்சை ஒப்படைத்தார்.

'' ஒரு ரூபாய் மட்டும் அதில் நான் எடுத்துக்கறேன் சரியா?'' என்றார். ஜகதீசனின் மனைவியும் தன்பங்குக்கு தங்க வளையல்களைக் கொடுத்தார்.

அதன்பின் கல்யாணம் ஆவணியில் நடந்து முடிந்தது. புரட்டாசி முடிந்து ஐப்பசி பிறந்தது. மீண்டும் ஒருநாள் நடேசன் மடத்திற்கு வந்தார். மஹாபெரியவரின் முன்பு காணிக்கையாக வந்த வேட்டி, சேலைகள் இருந்தன. அங்கு நின்ற தொண்டரிடம் 'அவனிடம் இந்த துணிமணிகளைக் கொடு' என்றார் மஹாபெரியவர். அத்துடன் வரிசையில் நின்ற பக்தர் ஒருவரை நோக்கி, ''உன் மோதிரத்தை இவனுக்குக் கொடு'' என்றார். அவரும் உடனே கொடுத்தார்.

இன்னொரு பக்தரிடம், ''உன் ரிஸ்ட் வாட்ச் புதுசா இருக்கு. அதையும் கொடு. நீ வேற வாங்கிக்கோ'' என்றார்.

வாட்சும் கைமாறியது. வேட்டி, சேலை, மோதிரம், வாட்ச் என வாங்கிக் கொண்ட நடேசனுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

அவர் சென்ற பின்னர் பக்தர்களிடம், ''இவனோட பொண்ணுக்கு இப்போ

தலைதீபாவளி. அதைச் சொல்லத்தான் வந்தான். இவனோட அப்பா கணேச ஐயர் அந்தக் காலத்திலே, மடத்துக்கு கைங்கரியம் செய்தவரு. அவருக்கு மாத சம்பளம் வெறும் நாலு ரூபாய் தான்.

அவரைப் போல தியாகசீலர்களை நாம் நினைத்தாலே நமக்கு புண்ணியம்'' என்றார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us