தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஆசையா... கோபமா...

ஆசையா... கோபமா...

ஆசையா... கோபமா...


ADDED : மே 17, 2024 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் முகாமிட்டிருந்த காஞ்சி மஹாபெரியவர் மனிதப் பிறவி பற்றி பேசினார்.

மனிதப்பிறவி பற்றி யோசித்தது உண்டா? உடம்பு இருப்பதால் தானே அவமானம், கஷ்டம் வருகிறது. ஆனால் உண்மையில் புண்ணியம் செய்தவருக்கு மட்டுமே பிறவி கிடைக்கும்.

ஏன் மனிதப்பிறவி உயர்வானது? நமக்கு மட்டுமே ஆறறிவு உள்ளது. எதைச் செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என அறியும் தன்மை உண்டு. எனவே நற்செயல்களில் ஈடுபட்டு முக்திக்கு வழி தேட வேண்டும்.

'வீட்டுக் கூரையில் கரையான் புற்று கட்டினால் அடிக்கடி மண்ணை அகற்ற வேண்டியிருக்கும். ஆனாலும் பிரச்னை தீராது. நிரந்தரமாக புற்றை அகற்ற வேண்டுமானால் கூரையிலுள்ள தாய்ப்பூச்சியை அகற்ற வேண்டும். அது போல பிறவிக்கான காரணத்தை போக்காமல் வேறு எதைச் செய்தாலும் பயனில்லை.

பிறவிக்கான காரணம் ஆசை. அதனால்தான் காமம், கோபத்திற்கு அடிமையாகி தீய செயல்களில் ஈடுபடுகிறோம். இந்த இரண்டும் மனதில் இருந்தே தோன்றுகின்றன.

நம்மைத் தவிர வேறொரு பொருள் அழகாக இருந்தால் அதன் மீது ஆசை வருகிறது. கிடைக்காவிட்டால் கோபம் வருகிறது. விரும்பிய பொருள் கிடைத்த பின்னும் அதனால் துன்பம் ஏற்பட்டாலும் கோபம் வருகிறது.

ஆசையால் பிள்ளைகளை பெற்று ஆளாக்கிய பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்கின்றனர். மனைவியின் பேச்சை மகன் கேட்பதை கண்டால் கோபம் வருகிறது. காலப்போக்கில் பெற்ற மகன் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. இதனால் மனம் என்ன பாடுபடும்?

உலகில் இருப்பது எல்லாம் ஒரே பொருள் மட்டுமே. அதுதான் பரமாத்மா. ஆனால் மனதளவில் இரண்டாவது வஸ்து(பொருள்) இருப்பதாக நினைக்கும் வரை காமம், கோபம் நம்மை விட்டுப் போகாது. அதுவரை உடம்பு(பிறவி) தொடர்ந்து வரும். ஆகவே இந்தப் பிறவி போதும் எனக் கருதினால் காமம், கோபம் நம்மை விட்டு அகல வேண்டும். புரிகிறதா...

மீண்டும் மீண்டும் நாம் பிறவியால் அவதிப்படக் காரணம் இந்த ஆசையும் கோபமும் தான்'' என்றார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us